Published:Updated:

ஆப்கன்: பர்தா, ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது - தாலிபன்கள் உத்தரவு!

ஆப்கன் பெண்கள்
News
ஆப்கன் பெண்கள்

பெண்கள் அதிக தூரம் குறிப்பாக 75 கிலோமீட்டருக்கு அதிகமாக பயணம் செய்வதாக இருந்தால் நெருங்கிய ஆண் உறவினர் ஒருவரின் துணையோடுதான் செல்லவேண்டும்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை பிடித்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெண்களுக்குத்தான் அதிகப்படியான கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கின்றனர். தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் நன்னடத்தை மேம்பாடு மற்றும் குற்றத்தடுப்புத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் சாதிக் அகிப் அளித்த பேட்டியில், ``பெண்கள் அதிக தூரம் குறிப்பாக 75 கிலோமீட்டருக்கு அதிகமாக பயணம் செய்வதாக இருந்தால் நெருங்கிய ஆண் உறவினர் ஒருவரின் துணையோடுதான் செல்லவேண்டும். அதோடு வாகன உரிமையாளர்கள் பெண்களை முஸ்லிம்களின் ஆடையான பர்தா அணிந்து வந்தால் மட்டுமே வாகனங்களில் ஏற்றவேண்டும். வாகனங்களில் இசை ஒலிக்கக்கூடாது. இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெண் பத்திரிகையாளர்கள் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் பர்தா அணிந்துகொண்டுதான் கலந்து கொள்ளவேண்டும்" என்றார்.

தாலிபன்
தாலிபன்

ஏற்கெனவே, முன்னதாக பெண்கள் டிவி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று தாலிபன்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டிருப்பது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெரும்பாலான பெண்கள் பர்தா அணிந்தபடியே வெளியில் வருகின்றனர். அவர்களின் உரிமைகள் தற்போது அதிக அளவில் பறிக்கப்பட்டிருக்கிறது. 1990-ம் ஆண்டில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த போது பெண்களுக்கு இருந்த உரிமைகள் கூட இப்போது இல்லாமல் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பர்தா
பர்தா

ஆப்கனில் பெரும்பாலான மாகாணங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கின்றனர். பெண்களை சமமாக நடத்தவேண்டும் என்றும், அவர்கள் உரிமைகளை மதிப்பளிக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் தாலிபன் அரசை வலியுறுத்திவருகின்றன. ஆனால், உலக நாடுகளின் கோரிக்கைக்கு தாலிபான்கள் செவிசாய்க்கவில்லை.