Published:Updated:

ஆப்கன்: பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மறைத்து கொள்ள வேண்டும்; தாலிபன்களின் புதிய விதிமுறை!

ஆப்கன் பெண் செய்தி வாசிப்பாளர்

இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இது 'இறுதியான மற்றும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத முடிவு' எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆப்கன்: பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மறைத்து கொள்ள வேண்டும்; தாலிபன்களின் புதிய விதிமுறை!

இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இது 'இறுதியான மற்றும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத முடிவு' எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஆப்கன் பெண் செய்தி வாசிப்பாளர்

பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் தோன்றும் போது முகத்தை மறைத்து கொள்ள வேண்டும் என்கிற புதிய விதியை ஆப்கனில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தாலிபன் அரசு அறிவித்து இருக்கிறது. ஏற்கெனவே பொது இடங்களுக்கு பெண்கள் செல்லும் போது தலை முதல் கால் வரை பர்தா அணியவும், அவசியமில்லாது வெளியில் செல்வதைத் தவிர்க்க சொல்லியும் தடாலடியான விதிமுறைகளைத் தாலிபன்கள் அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் செயல்படும் TOLONews போன்ற தொலைக்காட்சிகளை நிர்வகிக்கும் MOBY என்கிற தனியார் ஊடகக் குழுமத்துக்கு ஆப்கானிஸ்தானின் நல்லொழுக்கங்களுக்கான அமைச்சரவை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு மட்டுமல்லாது ஆப்கனில் இருக்கும் பல ஊடகங்களுக்கு இந்த அறிவிப்பு சென்றிருக்கிறது.

துறையின் செய்தித் தொடர்பாளர் அகிப் மகஜர் (Akif Mahajar), "மீடியா சார்பில் பலரைச் சந்தித்து பேசிய போது அவர்கள் இந்த உத்தரவை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர்" எனத் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அங்கிருக்கும் மக்களால் வரவேற்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இது 'இறுதியான மற்றும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத முடிவு' எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மறைத்து கொள்ள வேண்டும் என்கிற அறிவிப்பை ஒரு பகுதியினர் ஏற்றுக் கொண்டாலும் இன்னொரு பக்கம் இதை கடுமையாக விமர்சிக்கவும் செய்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism