Published:Updated:

`ஆப்கன் ராணுவத்தின் ஓர் அங்கமாக தற்கொலைப் படை!’ - தாலிபன் முடிவுக்கு என்ன காரணம்?

தாலிபன் - ஆப்கானிஸ்தான்
News
தாலிபன் - ஆப்கானிஸ்தான்

``தேசத்துக்காகத் தியாகம் செய்பவர்களை உள்ளடக்கிய சிறப்பு குழுப் படை மிகவும் அதிநவீன மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.”

தாலிபன்கள் ராணுவத்தின் ஓர் அங்கமாக, தற்கொலைப் படையினரை அதிகாரபூர்வமாகப் பணி நியமனம் செய்ய முடிவெடுத்துள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அரசாங்கம் அமைத்ததிலிருந்து, அவர்களுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்த முயலும் ஐ.எஸ் அமைப்பைச் சமாளிக்க தாலிபன்கள் தற்போது தற்கொலைப் படையினரை அதிகாரபூர்வமாக ராணுவத்தில் நியமிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

தாலிபன்
தாலிபன்
AP

தாலிபன்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 20 ஆண்டு போர்க் காலத்தில் அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகளை வீழ்த்த தற்கொலைப் படையினரை ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தினர். இதைப் பற்றி தாலிபன் துணைச் செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமீ கூறுகையில், ``இப்போது ஆப்கானிஸ்தான் முழுவதும் சிதறிக்கிடக்கும் தற்கொலைப் படையைச் சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைத்து, ஒரே பிரிவின் கீழ் ஒரு குழுவாகச் செயல்பட வைக்கப்போகிறோம். இவர்கள் ஆப்கானிஸ்தானைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவர். தேசத்துக்காகத் தியாகம் செய்பவர்களை உள்ளடக்கிய சிறப்பு குழுப் படை மிகவும் அதிநவீன மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்" என்று விவரங்களை வழங்காமல் கூறினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2021, ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியபோது, தாலிபன்கள் அதிகாரத்தைப் பலப்படுத்த முயன்றனர். அப்போது குறைந்தபட்சம் ஐந்து பெரிய தாக்குதல்களை நடத்தியது ஐ.எஸ் ஆப்கன் பிரிவு. அவற்றில் பல தாக்குதல்கள் தற்கொலைப் படைகளால் நடத்தப்பட்டன. ஆகவே, இப்போது இந்தக் குழுவின் முக்கிய இலக்கு ஐ.எஸ் அமைப்பு தான் எனக் கூறப்படுகிறது.

தாலிபன்
தாலிபன்
Rahmat Gul

ஐ.எஸ் அமைப்பினர் தொடர்ந்து தாலிபன் அதிகாரத்துக்குச் சவால் விடுத்துவந்துள்ளனர், ஆப்கானிஸ்தான் மற்றொரு போரில் இறங்கப்போகிறது என்றும், அதில் ஆகஸ்ட் 26-ம் தேதி காபூல் விமான நிலையத்தில் 13 அமெரிக்கப் படையினர் உட்பட கிட்டத்தட்ட 200 பேரைத் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் கொன்றது குழுவின் மிகக் கொடிய தாக்குதலில் குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ் ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டுபிடிக்கத் தொடங்கியிருப்பதாகவும் தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.