தமிழ் நாட்டைச் சேர்ந்த பலர் உலக அளவில் முக்கியப் பதவிகளில் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த மோனிகா தேவேந்திரன் என்பவர் இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் பிறந்த இவர் இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி மாகாணத்தில் வசித்து வருபவர். அரசியலில் அதிகமான ஈடுபடு கொண்ட மோனிகா இங்கிலாந்தில் ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலில் மேற்கு பகுதி கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தற்போது பிற கவுன்சிலர்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் ஆதரவுடன் ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராகத் தேர்வாகி பதவியேற்றுள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இங்கிலாந்தில் இது போன்ற உயர் பதவிகளில் இந்தியர்கள் யாரும் இல்லை. இந்தச் சூழலில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மோனிகா தேவேந்திரன் துணை மேயராக பதவி ஏற்றுள்ளது பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது.
இது பற்றிக் பேசிய அவர், "சென்னையும் இங்கிலாந்தும் எனது இரு கண்கள் போன்றது. இங்கிலாந்தில் எம்.பி-யாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. விரைவில் சொந்த ஊருக்கு வந்து எனது வெற்றியை பகிர்ந்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
சமூக வலைதளங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் பல்வேறு அமைப்புகள் மோனிகாவின் இந்த வெற்றியைக் கொண்டாடி பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றன.