Published:Updated:

Miss Universe: பிரபஞ்ச அழகி போட்டியை நடத்தும் நிறுவனத்தை வாங்கிய திருநங்கை!

Anne Jakapong Jakrajutatip

பிரபஞ்ச அழகி (Miss Universe) போட்டியை நடத்தும் நிறுவனத்தைத் தாய்லாந்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் வாங்கியிருக்கிறார்.

Miss Universe: பிரபஞ்ச அழகி போட்டியை நடத்தும் நிறுவனத்தை வாங்கிய திருநங்கை!

பிரபஞ்ச அழகி (Miss Universe) போட்டியை நடத்தும் நிறுவனத்தைத் தாய்லாந்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் வாங்கியிருக்கிறார்.

Published:Updated:
Anne Jakapong Jakrajutatip

தாய்லாந்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தும் JKN குளோபல் குழுமத்தின் தலைவர் Anne Jakapong Jakrajutatip. இவர் ஒரு திருநங்கை. பிரபலமான ரியாலிட்டி ஷோக்களான புராஜெக்ட் ரன்வே மற்றும் ஷார்க் டேங்க் போன்ற தாய்லாந்து தொடர்களில் இவர் நடித்துள்ளார். திருநங்கைகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது பிரபஞ்ச அழகி (Miss Universe) போட்டியை நடத்தும் நிறுவனத்தை 20 மில்லியன் டாலர்களுக்கு, அதாவது இந்திய மதிப்பில் ரூ.165 கோடிக்கு இவர் வாங்கியுள்ளார்.

Anne Jakapong Jakrajutatip.
Anne Jakapong Jakrajutatip.

அந்நிறுவனத்தில் டொனால்ட் ட்ரம்ப் 1996 முதல் 2015 வரை இணை உரிமையாளராக இருந்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர். "மற்ற நாடுகளில் தாய்லாந்தின் நற்பெயரை இது மேம்படுத்தும்" என்று கூறியிருக்கிறார்.

அடுத்த ஆண்டு முதல் திருமணமான பெண்கள் மற்றும் தாய்மார்கள் பட்டத்துக்காகப் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள் எனப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். திருமணமாகாத மற்றும் குழந்தை பெறாத பெண்கள் மட்டுமே முன்பு போட்டியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த விதியை மாற்றியுள்ளனர். இந்தப் போட்டி 71 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இது 160க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.