Published:Updated:

``என் கணவரை `கவனித்து’க்கொள்ள பெண் தேவை; நமக்குள் சண்டை வராது” - வைரலான தாய்லாந்துப் பெண் விளம்பரம்

பெண் ( pixabay )

``அவரின் மகிழ்ச்சிக்காகவே இவை அனைத்தையும் செய்கிறேன். அவரை அனைத்து வகையிலும் கவனித்து நிம்மதியாக வைத்துக்கொள்ள எனக்கு ஆட்கள் தேவை.” - தாய்லாந்துப் பெண்

``என் கணவரை `கவனித்து’க்கொள்ள பெண் தேவை; நமக்குள் சண்டை வராது” - வைரலான தாய்லாந்துப் பெண் விளம்பரம்

``அவரின் மகிழ்ச்சிக்காகவே இவை அனைத்தையும் செய்கிறேன். அவரை அனைத்து வகையிலும் கவனித்து நிம்மதியாக வைத்துக்கொள்ள எனக்கு ஆட்கள் தேவை.” - தாய்லாந்துப் பெண்

Published:Updated:
பெண் ( pixabay )

தாய்லாந்தைc சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் கணவனை கவனித்துக்கொள்ள பெண்கள் தேவை என வெளியிட்ட விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த பதீமா சாம்னன் என்னும் 44 வயது பெண்மணி, தன் கணவனை கவனித்துக்கொள்வதற்கும், அவரை திருப்திப்படுத்தவும், என்டெர்டெயின் செய்யவும் மூன்று பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.

``என் கணவரை `கவனித்து’க்கொள்ள பெண் தேவை; நமக்குள் சண்டை வராது” - வைரலான தாய்லாந்துப் பெண் விளம்பரம்
pixabay

ஒரு வீடியோ பதிவாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் பேசிய அவர், "என்னுடைய கணவனை கவனித்துக்கொள்வதற்கு மூன்று பெண்கள் தேவை. அவர்கள் அழகாகவும், இளமையாகவும், படித்தவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டும். மூன்று பேரில் இருவர் என் கணவரின் அலுவலகப் பணிகளில் உதவியாக இருக்க வேண்டும். மீதமுள்ள ஒருவர் என் வீட்டை கவனிப்பதோடு என் கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். அவரின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு குழந்தை இருக்கக் கூடாது, அது ஒரு தடையாக அமையும். என் கணவர் மிகவும் கடுமையாக உழைப்பவர். அவரின் மகிழ்ச்சிக்காகவே இவை அனைத்தையும் செய்கிறேன். அவரை அனைத்து வகையிலும் கவனித்து, நிம்மதியாக வைத்துக்கொள்ள எனக்கு ஆட்கள் தேவை" எனக் கூறியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் இந்த வேலைக்கு வரும் பெண்களுக்கும், தனக்கும் எந்தவிதச் சண்டையும் வராது என உறுதியளித்த பதீமா, இந்த வேலைக்குச் சம்பளமாக மாதம் 15,000 பாத் (33,800 ரூபாய்) தருவதாகக் கூறினார். பதீமா மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் கணவரின் எந்தத் தேவையையும் கவனித்துக்கொள்ள முடியாததாலும், உடல் அளவில் அவரை திருப்தி செய்ய முடியாததால் இப்படி ஒரு முடிவு எடுத்ததாகவும் கூறுகிறார்.

``என் கணவரை `கவனித்து’க்கொள்ள பெண் தேவை; நமக்குள் சண்டை வராது” - வைரலான தாய்லாந்துப் பெண் விளம்பரம்
pixabay

அவரின் கணவரான படாகார்ன் இந்த விளம்பரத்தை ப்பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் அவர் அதை எதிர்க்கவில்லை. "இந்த வேலையை ஏற்று வரும் பெண் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நடத்தப்படுவார். வேறு ஏதாவது ஆண்களுக்கும் இதுபோல் நடக்க வேண்டும் என ஆசை இருந்தால் அவர்கள் தங்களின் மனைவியிடம்தான் பேச வேண்டும். என் மனைவியே இப்படி ஒரு வாய்ப்பை வழங்கும்போது அதை மறுக்க எனக்கு எண்ணம் இல்லை" எனக் கூறினார்.

இந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இந்த வேலையை ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் பெண் பதீமா சாம்னனின் நெருங்கிய தோழி என்றும் கூறுகின்றனர். விளம்பரம் வெளியிடப்பட்டபோது மூன்று பெண்களை வேலைக்குச் சேர்ப்பதாகக் கூறியிருந்தாலும் தற்போது இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் முடிவடைந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.