Published:Updated:

9 மருத்துவமனைகள்; 549 நாள்கள் கோவிட் சிகிச்சை; ஹண்டரின் நம்பிக்கையூட்டும் கதை!

டானல் ஹண்டர்

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் 549 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்.

9 மருத்துவமனைகள்; 549 நாள்கள் கோவிட் சிகிச்சை; ஹண்டரின் நம்பிக்கையூட்டும் கதை!

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் 549 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்.

Published:Updated:
டானல் ஹண்டர்

அமெரிக்காவின் நியூ மெக்ஸிக்கோ மாகாணத்தைச் சேர்ந்த டானல் ஹண்டர் என்பவர் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவிட் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தால் வெவ்வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இவ்வாறு மொத்தம் 9 மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டானல் ஹண்டர்
டானல் ஹண்டர்

ஹண்டர், மொத்தம் 9 மருத்துவமனைகளில் 549 நாள்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நாள்களில் இவரைப் பார்க்கவரும் இவரின் குடும்பத்தினர் ஜன்னல் வழியாக நின்று இவரைப் பார்த்து வந்துள்ளனர். சுமார் ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து கோவிட் தொற்றுடன் போராடிவந்த இவர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நீண்ட நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய இவரை அவரின் குடுபத்தினரும், வீட்டின் தெருவில் இருக்கும் அனைவரும் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்துக் கூறிய ஹண்டர், தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது வீட்டில் இருப்பது போன்றும் வீட்டில் தூங்கி எழுவது போன்றும் பலமுறை கனவு கண்டிருப்பதாகக் கூறினார். மேலும் தான் குணமடைந்து வீட்டிற்குச் செல்வேன் என்று நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், தற்போது தான் குணமடைந்திருப்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார். இவரின் வாழ்க்கை பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism