Published:Updated:

`Do Nothing' - `வேலையே செய்யாமல் சம்பாதிப்பது எப்படி?" - வாழ்ந்து காட்டும் ஜப்பானிய இளைஞர்

ஷோஜி மோரிமோடோ ( ட்விட்டர் )

``ஒரு மணி நேரத்துக்கு 69 பவுண்ட் (6,600 ரூபாய்) பெறுகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து என் குடும்பத்தையும் கவனித்துவருகிறேன்.’’

`Do Nothing' - `வேலையே செய்யாமல் சம்பாதிப்பது எப்படி?" - வாழ்ந்து காட்டும் ஜப்பானிய இளைஞர்

``ஒரு மணி நேரத்துக்கு 69 பவுண்ட் (6,600 ரூபாய்) பெறுகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து என் குடும்பத்தையும் கவனித்துவருகிறேன்.’’

Published:Updated:
ஷோஜி மோரிமோடோ ( ட்விட்டர் )

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் எந்த வேலையும் செய்யாமல், வெறுமனே இருப்பதையே வேலையாகச் செய்து பணம் சம்பாதிக்கும் செய்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஷோஜி மோரிமோடோ (Shoji Morimoto) (36) ஒரு பதிப்பக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது முதலாளி, `நீ எந்த வேலையும் செய்வதில்லை. வேலை செய்யாமல் சம்பாதிக்க முடியுமா?' என ஏதோ ஒரு காரணத்துக்காகத் திட்டியிருக்கிறார். அப்போதுதான் ஷோஜி மோரிமோடோ எதுவுமே செய்யாமல் சம்பாதிக்க என்ன வழி எனச் சிந்தித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து "do nothing" எனும் ட்விட்டர் கணக்கைத் தொடர்ந்திருக்கிறார்.

ஷோஜி மோரிமோடோ
ஷோஜி மோரிமோடோ
ட்விட்டற்

இது தொடர்பாக ஷோஜி மோரிமோடோ, "எனக்கு யாரிடமும் வேலை செய்யப் பிடிக்கவில்லை. அதனால் வேலையே செய்யாமல் வேலை செய்வதற்குப் புதிதாக முயன்றேன். பொதுவான இடங்களுக்குத் தனியே செல்ல வெட்கப்படுபவர்களுடன் ஒரு துணையாகச் சென்று வருவது, அவர்களுடன் சும்மா நேரத்தைச் செலவழிப்பது, அவர்களின் சுக துக்கங்களை காது கொடுத்துக் கேட்பது எனச் சிறு சிறு செயல்களைத்தான் செய்துவருகிறேன்.

ஷோஜி மோரிமோடோ
ஷோஜி மோரிமோடோ
ட்விட்டர்

அதற்காக, ஒரு மணி நேரத்துக்கு 69 பவுண்ட் (6,600 ரூபாய்) பெறுகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து என் குடும்பத்தையும் கவனித்துவருகிறேன். என்னை அழைத்துச் செல்லும் வாடிக்கையாளர்தான் நான் அருந்தும் பானம், உணவு, உள் அனுமதிச்சீட்டு என அனைத்துக்கும் பணம் கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார். எந்த வேலையும் செய்யாமல் சம்பாதிக்கும் இந்த மனிதரை ட்விட்டர் பக்கத்தில் 2.5 லட்சம் மக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதும், ஒரு நாளைக்கு 2 - லிருந்து 4 வாடிக்கையாளர்களைச் சந்திப்பார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ட்விட்டர் மூலம்தான் தனக்கு வாடிக்கையாளர்கள் வருவதாகவும் , ஒரு வாடிக்கையாளர் மட்டும் 270 முறை அவரை புக் செய்திருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார்.