Published:Updated:

The Lulo Rose: கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அரிய வகை `பிங்க்' நிற வைரம் - அங்கோலாவில் கண்டுபிடிப்பு

அரிய வகை பிங்க் நிற வைரம் ( ட்விட்டர் )

மத்திய ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் அரிய வகையிலான இளஞ்சிவப்பு நிற வைரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

The Lulo Rose: கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அரிய வகை `பிங்க்' நிற வைரம் - அங்கோலாவில் கண்டுபிடிப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் அரிய வகையிலான இளஞ்சிவப்பு நிற வைரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

Published:Updated:
அரிய வகை பிங்க் நிற வைரம் ( ட்விட்டர் )

மத்திய ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் உள்ள சுரங்கத்தில், சுரங்க தொழிலாளர்கள் அரிய வகை பிங்க் நிற வைரத்தை கண்டுபிடித்திருக்கின்றனர். இது கடந்த 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக லுகாபா வைர நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``170 காரட் கொண்ட இந்த பிங்க் நிற வைரமானது `தி லுலோ ரோஸ்' என அழைக்கப்படுகிறது. இந்த வைரம் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் லுலோ சுரங்கத்தில், சுரங்க தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பிங்க் வைரம் இதுவாகும்'' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிங்க் நிற வைரம்
பிங்க் நிற வைரம்
ட்விட்டர்

தி லுலோ ரோஸ் வைரத்தின் உண்மையான மதிப்பை கண்டறிய அதனை மெருகூட்ட வேண்டும் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு மெருகூட்டும் போது அதன் எடையில் சுமார் 50 சதவிகிதத்தை இழக்ககூடும். இந்த வைரமானது சர்வதேச டெண்டரில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும். அப்போது இது அதிக விலைக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிங்க் நிற வைரமானது ஒரு வகை `இலா' வைரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!