Published:Updated:

118 ஆண்டுகளில் முதல்முறை! - அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு

Peter Handke
Peter Handke

நோபல் பரிசின் 118 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கான பரிசு ஒரே நாளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது

ஆல்பிரட் நோபலின் நினைவாக நோபல் பரிசு,1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டுக்கான, மருத்துவம், இயற்பியல், வேதியல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக எதிர்பார்ப்புக்குக் காரணம், கடந்த 2018ல், சர்ச்சை ஒன்றின் காரணமாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. ஆகையால், நோபல் பரிசின் 118 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கான பரிசுகள் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Peter Handke
Peter Handke

2018ம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஒல்கா டொகார்சுக்கும் , 2019ம் ஆண்டுக்கான பரிசு பீட்டர் ஹாண்ட்கே-வுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதான ஒல்கா டொகார்சுக் போலந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார். இவர் கடந்த ஆண்டு புக்கர் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த மொழி நடைக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு பெற்றுள்ள 76 வயதான பீட்டர் ஹாண்ட்கே, ஆஸ்திரியாவைச் சேர்ந்த சிறந்த நாடக மற்றும் நாவலாசிரியர் ஆவார். மொழியியல் புலமைக்காக அவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் வெற்றி பெற்றிருக்கும் இருவருக்கும் தனித்தனியே ஒன்பது மில்லியன் ஸ்வீடன் குரோனர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 6,49,79,533 அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு