உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன்மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இதையடுத்து உக்ரைனில் வசிக்கும் மக்கள், வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர். இதையடுத்து இந்திய அரசு உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டீம் எஸ்ஓஎஸ் இந்தியாவின்(SOS INDIA) நிறுவனர் நித்தேஷ் சிங், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியபோது, அங்குள்ள இந்திய மாணவர்களை ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா அல்லது ருமேனியா ஆகிய நாடுகளின் எல்லைகளைக்குக்கொண்டு வர அவருக்கு நிறைய பேருந்துகள் மற்றும் கார்கள் தேவைப்பட்டது. எனவே தனியார் பேருந்துகளை அணுகத் திட்டமிட்டிருந்தார். ஆனால் தனியார் பேருந்துகள் தலா ஒருவருக்கு சுமார் 250 டாலர் என விலையை உயர்த்தியிருந்தன.

இந்த சமயத்தில் உக்ரைனில் சுற்றுலாப் பேருந்து தொழில் செய்து வரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மோசம் கான்.(Moazam Khan) என்பவர் தானாக முன் வந்து சுமார் 2,500 இந்திய மாணவர்களை உக்ரைனிலிருந்து வெளியேற்ற உதவியுள்ளார். இதில் பல மாணவர்களுக்கு பணம் ஏதும் வாங்காமல் இரவு பகல் பாராமல் உதவியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுபற்றிக் கூறும் மோசம் கான், ‘நான் அவர்களிடம் $20 முதல் $25 வரை மட்டுமே வசூலித்தேன். பல சமயங்களில் அவர்களிடம் நான் பணம் வசூலிக்கவில்லை’ என்று கூறினார். மேலும் இந்திய மாணவர்களின் பெற்றோர்கள் தனது வாட்ஸ்அப்பில் தனக்கு நன்றி தெரிவித்து செய்திகளை அனுப்பியிருந்ததாகவும் அவர்கள் போனில் கொடுத்த ஆசீர்வாதங்கள் தனக்கு போதும் என்றும் கூறினார். இதுபோன்ற போர் சூழலில் எதையும் எதிர்பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வரவேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் இந்த போர் சூழலுக்கு முன்பே இந்தியர்களுடம் தான் நல்ல நட்புடன் இருந்து வருவதாகவும் இந்தியாவில் அவருக்கு நிறைய நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.