Published:Updated:

அயர்லாந்து: தவறவிட்ட லக்கேஜ்; உதவாத அதிகாரிகள்; ஒருவாரம் போராடி கண்டுபிடித்த நபர்; நடந்தது இதுதான்!

லக்கேஜ்

தான் தவறவிட்ட லக்கேஜை பெறுவதற்காக அயர்லாந்தை சேர்ந்த நபர் ஒருவர் மீண்டும் டிக்கெட் எடுத்துச் சென்று தனது லக்கேஜை மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

அயர்லாந்து: தவறவிட்ட லக்கேஜ்; உதவாத அதிகாரிகள்; ஒருவாரம் போராடி கண்டுபிடித்த நபர்; நடந்தது இதுதான்!

தான் தவறவிட்ட லக்கேஜை பெறுவதற்காக அயர்லாந்தை சேர்ந்த நபர் ஒருவர் மீண்டும் டிக்கெட் எடுத்துச் சென்று தனது லக்கேஜை மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
லக்கேஜ்
Dermot Lennon என்பவர் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிற்கு சென்றுவிட்டு கடந்த ஜூன் 27-ம் தேதி அயர்லாந்தில் உள்ள டப்ளினுக்கு திரும்பியிருக்கிறார். அப்போது டப்ளின் விமான நிலையத்தில் தன்னுடைய லக்கேஜ் ஒன்றைத் தவறவிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக டப்ளின் விமான நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் கடந்த ஜூலை 4-ம் தேதி மீண்டும் டப்ளின் விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அதிகாரிகள் எந்த ஒரு உதவியும் புரியாததால் அன்றைய நாள் முழுவதும் அவர் விமான நிலையத்திலேயே தன்னுடைய லக்கேஜைத் தேடி அலைந்திருக்கிறார். இதுகுறித்து Claire Byrne Show-வில் பேசிய லெனான், நான் மிகவும் குழப்பான மனநிலையில் இருந்தேன். அடுத்த நாள் விமான நிலையத்திற்கு சென்றபோது செக்யூரிட்டி செக்கிங்கை கடக்க ஃப்ளைட் டிக்கெட் எடுத்துச் சென்றேன். மலிவான டிக்கெட்டைப் பெற முடிவெடுத்து 18 யூரோக்கு வாங்கிய பின் செக்யூரிட்டி செக்கிங் மற்றும் லக்கேஜ்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றேன்.

லக்கேஜ்
லக்கேஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த இடத்தில் நிறைய டிராவல் பேக்ஸ் ,சூட்கேஸ்கள் இருந்தன. அதில் ஜூன் 15 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகள் குறிப்பிட்ட சில லக்கேஜ்கள் இருந்தன. அதில் தேடிக் கண்டுபிடித்து என்னுடைய லக்கேஜை மீட்டெடுத்தேன் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் அவர், இதே போல் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அவருடைய பேக்-ஐ மீட்டெடுக்க 300 யூரோ செலுத்தியதாக என்னிடம் கூறினார் என்று ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்துள்ள டப்ளின் விமான நிலைய செய்தித் தொடர்பாளர், “எந்த விமான நிறுவனத்திற்கும் டப்ளின் விமான நிலைய நிர்வாகம் பேக்கேஜ் சேவையை கையாளுவதில்லை. பயணிகள் டிக்கெட் புக் செய்யும் ஏர்லைன்ஸ் அல்லது மூன்றாம் தர ஏஜென்ட்களே லக்கேஜ்களுக்கும், பயணிகளின் செக் இன்களுக்கும் பொறுப்பு" என்றார்.