Published:Updated:

``கண்களை மூடிக்கொண்டு அவரை சுட்டேன்” - புரட்சி வீரன் சே குவேராவைக் கொன்ற ராணுவ வீரர் மரியோ மரணம்

சே-வைக் கொன்றவர் உயிரிழந்தார்

சே குவேராவை சுட்டுக்கொன்ற பொலிவிய ராணுவ வீரர் உயிரிழந்தார்.

``கண்களை மூடிக்கொண்டு அவரை சுட்டேன்” - புரட்சி வீரன் சே குவேராவைக் கொன்ற ராணுவ வீரர் மரியோ மரணம்

சே குவேராவை சுட்டுக்கொன்ற பொலிவிய ராணுவ வீரர் உயிரிழந்தார்.

Published:Updated:
சே-வைக் கொன்றவர் உயிரிழந்தார்

டி-ஷர்ட்களிலும், மாணவர் சங்கக் கொடிகளிலும் நாம் பார்த்துப் பழகிய முகம் சே குவேராவினுடையது. நம்மில் பலருக்கும் `சே குவேரா' ஒரு புரட்சியாளர் என்று தெரிந்திருக்கும். பொலிவிய இராணுவத்தால் தனது 39-வது வயதில் சே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்ட மரியோ டெரான் சாலாசார் கடந்த வியாழக்கிழமை புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

சே குவேரா:

`சே குவேரா' எனப் பிரபலமாக அறியப்படும் இவரின் முழுப் பெயர் எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா. அர்ஜென்டினாவில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே மருத்துவமும் பயின்றார். சே என்றால் சகா அல்லது தோழன் என்று பொருள்.

சே குவேரா
சே குவேரா

ஃபிடல் கேஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவில் அமெரிக்க ஏகாத்திபத்தியத்தை எதிர்த்தவர். கியூபப் புரட்சியின் முக்கிய கம்யூனிஸ்ட் பிரமுகர். சுதந்திர கியூபாவின் அமைச்சர்களுள் ஒருவராகவும் திகழ்ந்தார். புரட்சிக்குப் பின்னான கியூபாவின் வளர்ச்சியில் இவருக்கும் பங்கு உண்டு. ஆனாலும், கியூபாவிலேயே தங்கி விடவில்லை சே. தென் அமெரிக்காவிற்குப் பயணம் செய்த இவர், அங்கு பொலிவிய மக்கள் ஒடுக்கப்படுவதையும், அதை எதிர்த்துப் புரட்சி நடப்பதையும் கவனித்தார். முறையான தலைமை இல்லாமல் இருந்த பொலிவிய கெரில்லா வீரர்களை ஒன்றிணைத்துப் போர் தொடங்கினார். பின்பு அந்த மண்ணிலேயே உயிர் நீத்தார். இறப்புக்குப் பின்னர், ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னமாக உலகெங்கிலும் இவர் அறியப்படுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘சே’ என்னும் மந்திரச் சொல்!
‘சே’ என்னும் மந்திரச் சொல்!

``மோட்டர் சைக்கிள் டைரிஸ்” முதலிய நூல்கள் இவரது மரணத்திற்குப் பின்னர் வெளிவந்தன. சேவின் எலும்புகள் கியூபா கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு நினைவிடமும் எழுப்பப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சேவின் மரணம்:

அக்டோபர் 8, 1967 அன்று சே பொலிவிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். காடு மலைகளில் ஒளிந்து தாக்கும் `கெரில்லா' படைக்குழு ஒன்றின் தலைவர் சே. பொலிவிய அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான புரட்சிக்கு சே தான் உரம். எப்படியாவது சேவைப் பிடித்துவிட வேண்டும் என அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ. ஒரு பக்கம் இவரைத் தேடிக் கொண்டிருந்தது. அப்படித் தேடிக்கொண்டிருந்த சி.ஐ.ஏ ஏஜென்ட் ஃபெலிக்ஸ் ரோட்ருகீஸ் சண்டை ஒன்றில் காயம்பட்டு வீழ்ந்த சே-யை பொலிவிய இராணுவத்தின் உதவியுடன் கைது செய்தார்.

Mario
Mario

கைது செய்யப்பட்ட சே, அருகிலிருந்த ஊரான லா ஹிகுவேரா-விற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த பள்ளிக்கூடத்தில் தான் சே தனது வாழ்வின் கடைசி நாளைக் (இரவை) கழித்தார். அந்த நிலையிலும், பள்ளிக்கூடத்தின் நிலைமை மோசமாக இருந்ததை எண்ணி வருந்தி, அதை பொலிவிய இராணுவத்திடமே கூறினார்.

அப்போதைய பொலிவிய அதிபர் ரெனே பேரியன்டோஸ் உத்தரவின் பேரில் சே-வை மரியோ சுட்டார். ``சேவின் கண்களில் அப்போதும் கூட ஒரு ஒளி இருந்தது. அவர் பார்வை என்னை நடுக்கமுறச் செய்தது. திடீரென்று பாய்ந்து என்னுடைய துப்பாக்கியை அவர் பறித்துக் கொள்ளக்கூடும் என்றே எண்ணிணேன். ஆனால் அவர் அப்படி ஒன்றும் செய்யவில்லை. `நடுங்காதே. சரியாகக் குறிபார்த்து சுடு. ஒரு மனிதனைத் தானே கொல்லப்போகிறாய்?’ என்ற வார்த்தைகள் சேவிடமிருந்து வந்தன. கண்களை இருக்க மூடிக்கொண்டு அவரை சுட்டேன்” எனப் பின்னாளில் மரியோ தெரிவித்தார். சேவைத் துளைத்த தோட்டா போல மரியோவும் ஒரு கருவி. சே என்ற வீரனை வீழ்த்த, புரட்சியை நசுக்கப் பயன்பட்ட ஒரு கருவி. 30 ஆண்டுகால இராணுவப் பணிக்குப் பின்பு மரியோ ஓய்வு பெற்றார். ஊடகங்களிடமிருந்து முடிந்த வரை ஒதுங்கியே வாழ்ந்தார் மரியோ. 54 ஆண்டுகளுக்கு முன்பு சேவை சுட்ட மரியோ, புற்றுநோய் காரணமாக தனது 80-வது வயதில் உயிரிழந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism