Published:Updated:

உக்ரைன்: "அப்பா எனக்காக வாங்கிவந்த பிரட் இரத்தத்தில் கிடந்தது"- தாக்குதலில் நடந்த உலுக்கும் சம்பவம்

சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

கடைசியாக அவரைப் பார்த்தபோது எனக்காக அவர் வாங்கி வந்த பிரட் இரத்தத்தில் கிடந்தது. அதுதான் அப்பா எனக்காக வாங்கி வந்த கடைசி பொருள் என்று அவர் மகள் உருக்கம்.

உக்ரைன்: "அப்பா எனக்காக வாங்கிவந்த பிரட் இரத்தத்தில் கிடந்தது"- தாக்குதலில் நடந்த உலுக்கும் சம்பவம்

கடைசியாக அவரைப் பார்த்தபோது எனக்காக அவர் வாங்கி வந்த பிரட் இரத்தத்தில் கிடந்தது. அதுதான் அப்பா எனக்காக வாங்கி வந்த கடைசி பொருள் என்று அவர் மகள் உருக்கம்.

Published:Updated:
சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இப்போரில் பல அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 18 அன்று தன் மகளுக்காக பிரட் வாங்கச் சென்ற தந்தை ரஷ்யத் தாக்குதலில் பலியானார்.

உக்ரைனில் ரஷ்யா தொடுத்துள்ள சிறப்பு இராணுவ நடவடிக்கை காரணாமாக உக்ரைனில் உள்ள கார்கிவ் போன்ற முக்கியப் பகுதிகளில் இருக்கும் மக்கள் அனைவரும் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். சிலர் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் கார்கிவ் பகுதியைச் சேர்ந்த விக்டர் குபரேவ் (Victor Gubarev) என்பவர் தனது மகளுக்காக அருகில் இருந்த கடையில் பிரட் வாங்கிவிட்டு வீட்டிற்குத் திரும்பியிருக்கிறார்.

சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்
சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

அப்போது கார்கிவ் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் விக்டர் குபரேவ் பலியானார். இந்த செய்தி அறிந்து வந்த அவரது மகள் யானா பச்செக் (Yana Bachek) தன் தந்தை தனக்கு வாங்கி வந்த பிரட்டுடன் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் செல்லும் காட்சி அனைவரையும் உலுக்கி வருகிறது.

இதுபற்றிக் கூறிய அவரது மகள் யானா பச்செக், "ஆசிரியராகப் பணிபுரியும் அவர் சமயலறையில் படித்துக்கொண்டிருந்ததாகவும் அப்போது திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் சத்தம் கேட்டதாகவும் கூறினார். அப்போதுதான் அவர் தந்தை தனக்காக பிரட் வாங்க வெளியில் சென்றுள்ளார் என்பது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. பின்னர் தந்தைக்கு போன் செய்து பார்த்த போது அவர் எடுக்காததால் சந்தேகம் அடைந்த யானா பச்செக் வெளியில் சென்று பார்த்துள்ளார். பின்னர் தன் தந்தை தனக்கு வாங்கி தனக்கு வாங்கி வந்த பிரட்டுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகக் கூறினார்.

மேலும் தன் தந்தைப் பற்றி உருக்கமாகப் பகிர்ந்த அவர், "போரில் கூட, அவர் புன்னகைத்து, கேலி செய்து, எங்களுக்கு ஆதரவளிக்க முயன்றார். அவர் எப்போதும் 'நீங்கள் என் பெண்கள், என் ஹீரோக்கள்' என்று சொல்வார். கடைசியாக அவரைப் பார்த்தபோது எனக்காக அவர் வாங்கி வந்த பிரட் இரத்தத்தில் இருந்தது. அதுதான் அப்பா எனக்காக வாங்கி வந்த கடைசி பொருள்" என்று அவர் மகள் யானா பச்செக் உருக்கமாகப் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism