Published:Updated:

``விரைவில் தாலிபன் அரசை உலகம் அங்கீகரிக்க வேண்டும்!" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இம்ரான் கான்

``தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றியபோது, ​​அகதிகளின் வெள்ளம்போல பாகிஸ்தானுக்குள் நுழைந்தனர்.” - இம்ரான் கான்.

``விரைவில் தாலிபன் அரசை உலகம் அங்கீகரிக்க வேண்டும்!" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

``தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றியபோது, ​​அகதிகளின் வெள்ளம்போல பாகிஸ்தானுக்குள் நுழைந்தனர்.” - இம்ரான் கான்.

Published:Updated:
இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்த அந்தப் பேட்டியில், "ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபன்களுக்கு தற்போது மாற்று கிடையாது, இப்போது அவர்களை யாராலும் மாற்றவும் முடியாது. மேலும், தாலிபன் அரசு நசுக்கப்பட்டால், வேறொரு நல்ல மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்டால் இல்லைதானே?

எனவே, பாகிஸ்தானிகளான எங்களிடம் உள்ள ஒரே வழி, தாலிபன்களுடன் இணைந்து பணியாற்றுவதும், உலகம் விரும்புவதுபோல அவர்களை அரசு நிர்வாகம், மனித உரிமைகள், பெண்களின் உரிமைகள் போன்றவற்றை ஊக்குவிப்பதும்தான்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

இன்னொரு பக்கம், தாலிபன்கள் கைவிடப்பட்டால், பொருளாதாரத் தடைகள் காரணமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் குழப்பத்துக்குச் சென்றுவிடும். மீண்டுமொரு மனிதாபிமானமற்ற நிகழ்வு ஏற்பட வாய்ப்பு அமைந்துவிடும். அண்டை நாடான ஆப்கானிஸ்தானின் உறுதியற்ற தன்மையால், அகதிகள், பயங்கரவாதத் தாக்குதல்கள் என இரண்டு முக்கியச் சவால்களைப் பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டு தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றியபோது, ​​அகதிகளின் வெள்ளம்போல பாகிஸ்தானுக்குள் நுழைந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இம்ரான் கான்
இம்ரான் கான்

எனவே, ஒரு நிலையான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் அமைதி, நிலைத்தன்மையை உறுதி செய்யும் என்பது எங்களின் நம்பிக்கை. மேலும், ஆப்கானியர்களில் பாதி மக்கள் பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். எனவே, விரைவில் தாலிபன் அரசு அங்கீகரிக்கப்பட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.