Published:Updated:

"நாங்கள் தவறுதலாகப் பணிநீக்கம் செய்துவிட்டோம்!"- ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைக்கும் ட்விட்டர்

ட்விட்டர்

பணி நீக்கம் செய்யப்பட்ட சில ஊழியர்களின் மதிப்பை உணர்ந்து அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க ட்விட்டர் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

"நாங்கள் தவறுதலாகப் பணிநீக்கம் செய்துவிட்டோம்!"- ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைக்கும் ட்விட்டர்

பணி நீக்கம் செய்யப்பட்ட சில ஊழியர்களின் மதிப்பை உணர்ந்து அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க ட்விட்டர் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
ட்விட்டர்

உலகின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களுடன் ட்விட்டரையும் தனது பெயருடன் இணைத்துக் கொண்டார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய உடனே அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பராக் அகர்வால் (CEO), தலைமை நிதி அதிகாரி (CFO) நெட் செகல், தலைமை சட்ட அதிகாரி (CLO) விஜயா கட்டே உள்ளிட்டோரை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வரும் நிலையில், அதில் 50 சதவிகிதப் பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.

பின் அதிகாரபூர்வமாக ட்விட்டர் நிறுவனம்  தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு ஒன்றை அனுப்பியிருந்தது. அதில் "ட்விட்டர் நிறுவனத்தை ஆரோக்கியமான பாதையில் வழிநடத்த, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை இன்று தொடங்கியுள்ளோம். உங்களுக்கு இமெயில் மூலம் தகவல்களையும் அனுப்பியுள்ளோம். அதில் நீங்கள் பணியில் தொடர்கிறீர்களா இல்லையா என்ற விவரம் தெரியவரும்” என்று தெரிவித்திருந்தனர்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ஒரே நாளில் ட்விட்டர் நிறுவனத்திலிருந்து 50 சதவிகித ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலரை மீண்டும் வேலைக்கு வரும்படி ட்விட்டர் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. "சிலரை நாங்கள் தவறுதலாகப் பணிநீக்கம் செய்துவிட்டோம். எலான்  மஸ்க் வைத்திருக்கும் புதிய திட்டங்களை நிறைவேற்ற அவர்களின் பணி மற்றும் அனுபவம் அவசியம் என்பதை நிர்வாகம் உணராமல் அவர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் மதிப்பை உணர்ந்து அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவுள்ளோம்" என்று ட்விட்டர் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.