Published:Updated:

பாகிஸ்தான் அரசை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராட்டம்! முஷாபராபாத் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

அக்டோபர் 22-ந் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டம்

காஷ்மீரின் ஒரு பகுதியைச் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகர் முஷாபராபாத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இருவர் பலியானார்கள். காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள பாகிஸ்தான் அதற்கு ஆஸாத் காஷ்மீர் என்றும் கில்ஜித் காஷ்மீர் எனவும் பெயர் சூட்டியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகர் முஷாபராபாத். பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்தியப் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்கள் செயல்படுவதால், இந்திய ராணுவமும் அடிக்கடி அங்கே தாக்குதல் நடத்துகிறது. இரு நாள்களுக்கு முன் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் 22- ந் தேதி பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்தது. இந்த தினத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கறுப்பு தினமாக அனுஷ்டிப்பது வழக்கம். கடந்த அக்டோபர் 22- ந் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கறுப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தலைநகர் முஷாபராபாத்தில் ஜம்மு காஷ்மீர் மக்கள் தேசிய கூட்டமைப்பு பொதுமக்களுடன் இணைந்து பெரும் போராட்டம் நடத்தியது. அப்போது, மக்களுக்கும் போலீஸாருக்குமிடையே மோதல் வெடித்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

கூட்டத்தினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள். 80 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து, முஷாபராபாத் பிரஸ் கிளப்பில் ஜம்மு காஷ்மீர் மக்கள் தேசிய கூட்டமைப்புச் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியது. இந்த சமயத்தில் பிரஸ் கிளப்புக்குள் நுழைந்து போலீஸார் தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசினர். போலீஸார் நடத்திய தாக்குதலில், ஏராளமான பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.