Published:Updated:

அமெரிக்கா: 10 நாள்களில் இரண்டாவது முறையாக சீக்கியர்கள் மீது தாக்குதல் - போலீஸ் விசாரணை தீவிரம்!

நியூயார்க் ( AP )

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை அமெரிக்கக் காவல்துறை கைது செய்துள்ளது.

அமெரிக்கா: 10 நாள்களில் இரண்டாவது முறையாக சீக்கியர்கள் மீது தாக்குதல் - போலீஸ் விசாரணை தீவிரம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரை அமெரிக்கக் காவல்துறை கைது செய்துள்ளது.

Published:Updated:
நியூயார்க் ( AP )

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரிச்மண்ட் ஹில் பகுதியில் நேற்று அதிகாலை சீக்கியர் ஒருவர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள், அந்த சீக்கியரைக் கம்பியால் தாக்கியுள்ளனர். மேலும், அவரது தலைப்பாகையையும் அகற்றி அவமானப்படுத்தியுள்ளனர்.

இதே போன்ற இன்னொரு சம்பவம் பத்து நாள்களுக்கு முன்னர் நடந்துள்ளது. இதே நியூயார்க் நகரில் உள்ள ரிச்மண்ட் ஹில் பகுதியில் வயதான சீக்கியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இரண்டாவது முறை சீக்கியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இந்தியத் தூதரகம் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது. விசாரணை நடத்தி வரும் உள்ளூர் காவல்துறையுடன் தொடர்பில் உள்ளோம். 10 நாள்களுக்குள் இதுபோன்ற இரண்டாவது தாக்குதலில் இரண்டு சீக்கியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism