Published:Updated:

அபுதாபி: ட்ரோன் மூலம் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்; 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி!

அபுதாபி விமான நிலையம் ( zawya )

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அபுதாபி: ட்ரோன் மூலம் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்; 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி!

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published:Updated:
அபுதாபி விமான நிலையம் ( zawya )

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள விமான நிலையத்தில் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாகக் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் விமான நிலைய பகுதியில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பது அங்கு பதற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் 3 எரிபொருள் கலன்கள் சேதமடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு
ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு

இந்த திடீர் சம்பவம் குறித்து வளைகுடா மாகாண அதிகாரிகள் கூறுகையில், ``இந்த வெடிகுண்டு தாக்குதல் இரண்டு ட்ரோன்கள் மூலம் நடைபெற்று இருக்கலாம்" என்று கூறியுள்ளனர். அதிகாரிகளின் இந்த அறிவிப்பையடுத்து, அபுதாபி விமான நிலையத்தில் நிகழ்ந்த ட்ரோன் வெடிகுண்டு தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெடிகுண்டு தாக்குதல்
வெடிகுண்டு தாக்குதல்
NBC news

மேலும் இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் குறித்து வெளியான தகவலின்படி இதுவரை 2 இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதலால் அபுதாபியில் மக்களிடையே மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism