Election bannerElection banner
Published:Updated:

நூறு கோடி டாலர் கடனைத் திருப்பிக் கேட்கும் ஐக்கிய அரபு அமீரகம் - செய்வதறியாமல் தவிக்கும் பாகிஸ்தான்

இம்ரான் கான்
இம்ரான் கான்

கொரோனாவால் பாகிஸ்தானின் மொத்த ஜி.டி.பி -1.5%-ஆக வீழ்ச்சிடைந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை பாரபட்சமின்றி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. குறிப்பாக அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு உதவும் நோக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நூறு கோடி அமெரிக்க டாலர் வழங்கியது. பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தானில் அந்தத் தொகை செலுத்தப்பட்டது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு மார்ச் 12-ம் தேதியோடு முடிவடைகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

ஆனால், கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கத்திலிருந்து இன்னும் மீளாத பாகிஸ்தான், கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று புரியாமல் நெருக்கடியில் நிற்கிறது.

இன்றைய சூழலில் ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தானில் வைக்கப்பட்ட அந்தத் தொகையைத் திருப்பி கொடுப்பது மீண்டும் பாகிஸ்தானைப் பொருளாதாரச் சிக்கலுக்குள் தள்ளும். எனவே காலக்கெடுவை நீட்டிக்கக் கோருவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசை குறிப்பாக, பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான்- ஐ தொடர்புகொள்ள முயன்றுவருகின்றனர். இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால் நூறு கோடி டாலர் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் பீதியில் உள்ளனர்!

உலக வங்கி மதிப்பீட்டின்படி, கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கத்தால், பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2019-2020 நிதியாண்டில் 1.9 சதவிகிதத்திலிருந்து 2020 - 21 நிதியாண்டில் -1.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா! மீண்டும் ஊரடங்கா? உண்மைநிலை என்ன?!

2021-ம் ஆண்டின் தொடக்கத்தில், சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இடையே 500 மில்லியன் டாலர் கடனுதவி பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. கடன் நெருக்கடியைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டாலர் கடனாக வழங்க சர்வதேச நிதி நிறுவனம் 2019-ம் ஆண்டு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு