Published:Updated:

மனதை உலுக்கும் புச்சா படுகொலைகள்

உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

ரஷ்ய ராணுவத்தினரால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

மனதை உலுக்கும் புச்சா படுகொலைகள்

ரஷ்ய ராணுவத்தினரால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

Published:Updated:
உக்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
உக்ரைன்

உக்ரைனின் புச்சா நகரில் கொடூரத் தாக்குதல்களை நடத்தி, 400-க்கும் மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்று குவித்திருக்கிறது ரஷ்யா. மனதை உலுக்கும் புச்சா படுகொலைகளின் சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி, உலக நாடுகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கின்றன. 50 நாள்களை நெருங்கிக்கொண்டிருக்கும் ரஷ்யா - உக்ரைன் போரில் என்ன நடக்கிறது?

புதின்
புதின்

இனப்படுகொலையில் ரஷ்யா?

உக்ரைன் தலைநகர் கீவ்-விலிருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கிறது புச்சா நகரம். புச்சா நகரத்தை முற்றிலும் நாசம் செய்த ரஷ்ய ராணுவம், அங்கிருந்து கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியேறியது. இதையடுத்து புச்சா நகருக்குள் நுழைந்த உக்ரைன் படையினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... சாலைகள் முழுவதும் பொதுமக்களின் சடலங்கள் சிதறிக்கிடந்தன. கைகள் பின்புறம் கட்டப்பட்டு, நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பல சடலங்கள் இருந்தன. கைகளும் கால்களும் தனித் தனியாகச் சிதறிக் கிடந்தன. கொல்லப்பட்டவர்களின் சடலங்களைக் கறுப்பு நிற பாலித்தீன் பைகளில் போட்டு, குழிகளைத் தோண்டி அதில் தள்ளியிருக்கிறது ரஷ்ய ராணுவம்.

முதலில், புச்சா நகரத்தின் தேவாலயம் ஒன்றின் சாட்டிலைட் புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன், ``புச்சா நகர தேவாலயத்தில் 45 அடி நீளக் குழி தோண்டி, அப்பாவி பொதுமக்களைக் கொன்று, அந்தக் குழியில் புதைத்திருக்கிறது ரஷ்ய ராணுவம்’’ என்று குற்றம்சாட்டியது. அந்த தேவாலயத்தில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருந்தன. அந்தக் குழிகள்மீது போடப்பட்டிருந்த சிவப்புக் களிமண்ணின் வழியாகக் கைகளும் கால்களும் வெளியே தெரியும்படியான புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. காரில் தப்பிச் செல்ல முயன்ற ஒருவரை, காருக்கு அருகிலேயே சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர் பீரங்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை டிரோன் கேமரா ஒன்று படம் பிடித்திருக்கிறது. ரஷ்ய ராணுவத்தினரால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் கண்டறியப்பட்டிருக்கிறது. ஒருசில உடல்கள் எரிந்த நிலையில் கிடப்பதையும் படங்களில் காண முடிகிறது.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

போர்க் குற்றவாளி புதின்!

இதையடுத்து பல்வேறு நாடுகள் புதினுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``நான் சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினை, போர்க் குற்றவாளி என்று குறிப்பிட்டிருந்தேன். சிலர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தீர்கள். இப்போது புச்சாவில் என்ன நடந்தது என்று பார்த்தீர்கள்தானே... புதின் போர்க் குற்றவாளிதான்!” என்று கூறியிருக்கிறார். புச்சா படுகொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்த ரஷ்யா, ``மார்ச் 30-ம் தேதி ரஷ்யப் படைகள் புச்சாவிலிருந்து வெளியேறிய பின்னர், உக்ரைன் அரசு சாலைகளில் பிணங்களைப் போட்டுவிட்டு நாடகமாடுகிறது. இது குறித்து ஐ.நா., உக்ரைனிடம் விளக்கம் கேட்க வேண்டும்’’ என்று கூறியது. ஆனால், மேக்ஸார் டெக்னாலஜீஸ் செயற்கைக்கோள் உதவியுடன் எடுக்கப்பட்ட வீடியோக்களில், இந்த உடல்கள் அங்கு மூன்று வாரங்களாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மனதை உலுக்கும் புச்சா படுகொலைகள்

இடைநீக்கம் செய்த ஐ.நா...

தொடர்ச்சியாக உக்ரைனில் பொதுமக்களை ரஷ்யப் படைகள் கொன்றுவரும் நிலையில், அந்நாட்டை ஐ.நா மனித உரிமை கவுன்சிலிலிருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 93 நாடுகளும், எதிராக 24 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 58 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. இதையடுத்து, ஐ.நா மனித உரிமை கவுன்சிலிலிருந்து, ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக இதுவரை ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட எட்டு தீர்மானங்களிலும், எந்த ஒரு நாட்டுக்கும் ஆதரவாக இல்லாமல் நடுநிலை வகித்துவருகிறது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா-வில் கொதித்த ஜெலன்ஸ்கி!

கடந்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பேசினார். அப்போது, ``ரஷ்யப் படை, அப்பாவிப் பொதுமக்களின் கை கால்களை வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துவருகிறது. குழந்தைகள் முன்பே பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்கின்றனர். ரஷ்யப் படையினருக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ரஷ்ய ராணுவ வீரர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். புச்சா நகர வீதிகளில் பொதுமக்களின் சடலங்கள் கிடக்கும் புகைப்படங்கள், வெறும் உதாரணத்துக்காகவே வெளியிடப்பட்டன. இதைப்போல ஏராளமான கொடுமைகளைச் செய்திருக்கிறது ரஷ்ய ராணுவம். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சார்பாக அளிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்கள் எங்கே போயின’’ என்று காட்டமாகக் கேள்வியெழுப்பினார்.

மனதை உலுக்கும் புச்சா படுகொலைகள்

உக்ரைன் வீதிகளில் போரிஸ் ஜான்சன்!

உக்ரைனின் ஆதரவு நாடுகளுள் ஒன்றான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏப்ரல் 10-ம் தேதி அன்று உக்ரைன் தலைநகர் கீவ்-வுக்குச் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார். இருவரும் ரஷ்யத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வீதிகளில் நடந்தவாறு போர் நிலவரம் குறித்துப் பேசிக்கொண்டனர். போரிஸ் ஜான்சன், கீவ் வந்தடையும் வரை இந்தச் சந்திப்பு குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. போலந்து நாட்டுக்குச் சென்ற போரிஸ், அங்கிருந்து ரகசியமாக ரயில் வழியாக உக்ரைன் தலைநகர் கீவ் வந்தடைந்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தச் சந்திப்பு பற்றிப் பேசிய போரிஸ் ஜான்சன், ``ஜெலன்ஸ்கி சிறப்பான பணியைச் செய்துவருகிறார். உக்ரைனுக்குத் தொடர்ந்து எங்களுடைய உதவிகள் கிடைத்துக்கொண்டேயிருக்கும். உக்ரைன் மக்கள், சிங்கத்தைப்போல தைரியம் பெற்றவர்கள்’’ என்றார்.

தேவை அமைதி மட்டுமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism