Published:Updated:

`ரஷ்யா சிறைபிடிப்பதற்கு முன், பின்..!' - ராணுவ வீரரின் `அதிர்ச்சி' புகைப்படத்தை பகிர்ந்த உக்ரைன்

அதிர்ச்சி' புகைப்படத்தை பகிர்ந்த உக்ரைன்
News
அதிர்ச்சி' புகைப்படத்தை பகிர்ந்த உக்ரைன் ( @KyivIndependent )

ரஷ்யப் படையினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட உக்ரைன் வீரர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

`ரஷ்யா சிறைபிடிப்பதற்கு முன், பின்..!' - ராணுவ வீரரின் `அதிர்ச்சி' புகைப்படத்தை பகிர்ந்த உக்ரைன்

ரஷ்யப் படையினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட உக்ரைன் வீரர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published:Updated:
அதிர்ச்சி' புகைப்படத்தை பகிர்ந்த உக்ரைன்
News
அதிர்ச்சி' புகைப்படத்தை பகிர்ந்த உக்ரைன் ( @KyivIndependent )

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரானது, பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஷ்யப் படைகளை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் களமாடி வருகின்றனர். இந்தப் போரில் இரு நாடுகளின் தரப்பில் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில், ரஷ்யப் படையினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட உக்ரைன் வீரர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யப் படைகள் அண்மையில் விடுவித்த உக்ரைன் வீரர்களில் ஒருவரான மைக்கைலோ டியானோவின் எலும்பும், தோலுமான புகைப்படத்தை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்திருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் முகம் மற்றும் கைகளில் காயங்கள் அதிக அளவில் காயங்களும், உடல் மெலிந்த நிலையிலும் டியானோவ் காணப்படுகிறார்.

மைக்கைலோ டியானோவ்
மைக்கைலோ டியானோவ்
@KyivIndependent

டியானோவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், "உக்ரைன் வீரர் மைக்கைலோ டியானோவ் ரஷ்ய சிறையிலிருந்து தப்பித்த அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர். ரஷ்ய சிறையில் சக போர் கைதிகள் அடைபட்டிருக்க, இவர் தப்பியிருக்கிறார். இவ்வாறுதான் ரஷ்யா ஜெனீவாவின் உடன்படிக்கைகளை கடைப்பிடிக்கிறது. இப்படியாக வெட்கக்கேடான நாசிசத்தை இன்னும் ரஷ்யா பின்பற்றி வருகிறது" என்று பதிவிட்டுள்ளது.

மைக்கைலோ டியானோவ் மரியுபோலில் செம்பு வேலைகள் நடந்த இடத்தில் பாதுகாப்பு வீரராக இருந்துள்ளார். முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்ய வீரர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ரஷ்யப் படைகள் விடுவித்த டியானோவின் முகம், கைகளில் தழும்புகள் மற்றும் காயங்கள் அதிகமிருக்க... அவர் மிகவும் மெலிந்த தோற்றத்துடன் இருப்பது போன்ற புகைப்படத்தை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில், டியானோவின் சகோதரி அலோனா லாவ்ரிஷ்கோ, ``டியானோவ் தற்போது உக்ரைனின் கீவ் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணம் பெற்று வர நீண்ட நாள்கள் ஆகும்.

மைக்கைலோ டியானோவ்
மைக்கைலோ டியானோவ்
Iryna Timofeeva

டியானோவ் மனதளவில் மிகவும் வலிமையானவர். உக்ரைனுக்கு திரும்பி வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளார். இப்போதுதான் அவரால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிகிறது" எனக் கூறியிருக்கிறார்.

ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்படுவதற்கு முன்னும், பின்னுமான மைக்கைலோ டியானோவின் புகைப்படங்களைக் கண்டு உக்ரைன் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.