Published:Updated:

`சிறந்த போர் விமானி' என்றழைக்கப்பட்டவர் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய உக்ரைன்!

ஆன்டோன்

சிறிது நாள்களுக்கு முன்புதான் ஆன்டோன் தனது வீரம் மிகுந்த பங்களிப்புக்காக உக்ரைன் அரசின் மதிப்புமிக்க விருதை அதிபர் ஜெலன்ஸ்கியிடமிருந்து பெற்றார்.

உக்ரைனின் முக்கியப் போர் விமானிகளில் ஒருவர், தற்போது ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார். 'நியூஸ் வீக்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி கேப்டன் ஆன்டோன் லிஸ்தபாட் என்பவர் உக்ரைன் அரசின் `சிறந்த போர் விமானி’ விருதை 2019-ம் ஆண்டு பெற்றார். இவர் தற்போது கொல்லப்பட்டார் என்பதை மேற்கு உக்ரைனில் உள்ள அவர் படித்த கல்லூரி உறுதிசெய்திருக்கிறது. அந்தக் கல்லூரி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ``இயற்பியல் பட்டதாரியான ஆன்டோன் லிஸ்தபாட் உக்ரைனிய படைக்காகச் சண்டையிட்டுக் கொல்லப்பட்டார்" எனக் கூறப்பட்டுள்ளது.

`சிறந்த போர் விமானி' என்றழைக்கப்பட்டவர் உயிரிழப்பு...  சோகத்தில் மூழ்கிய உக்ரைன்!

204-வது செவாஸ்தபோல் விமானப் படையின் விமானியான ஆண்டோனின் உடல், மேற்கு உக்ரைனின் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் நகருக்கு அருகிலுள்ள சுகாலிவ்கா கிராமத்தில், அவரின் தோழர் கர்னல் யூரி போஹோரிலியுடன் அடக்கம் செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறிது நாள்களுக்கு முன்புதான் ஆன்டோன் தனது வீரம் மிகுந்த பங்களிப்புக்காக உக்ரைன் அரசின் மதிப்புமிக்க விருதை அதிபர் ஜெலன்ஸ்கியிடமிருந்து பெற்றார். கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் உக்ரைனின் 30-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆன்டோன் ஒரு படைக்குழுவுக்குத் தலைமை தாங்கினார்.

ஆன்டோனை அவர் கல்லூரி, `மிகவும் விடாமுயற்சிகொண்டவர்’ என்று நினைவுகூர்ந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் முதல் நிமிடம் முதல் கடைசி வரை அவர் உக்ரைனைப் பாதுகாத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

`சிறந்த போர் விமானி' என்றழைக்கப்பட்டவர் உயிரிழப்பு...  சோகத்தில் மூழ்கிய உக்ரைன்!

ரஷ்யா , உக்ரைன் மீதான படையெடுப்பை `சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்று அழைக்கிறது. உக்ரைன், அதன் ஆதரவு நாடுகள், ரஷ்யா ஓர் ஏகாதிபத்திய பாணி போரை நடத்துவதாகச் குற்றம்சாட்டுகின்றன.

இதுவரை இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போர் மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்குமான உறவுகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திவருகிறது.