Published:Updated:

உக்ரைன்: "முதுகைச் சில்லிட வைத்த தருணம் அது" - போர் குறித்து திரைப்பட இயக்குநர்!

உக்ரைனியன் இயக்குநர் ஸ்டானிஸ்லாவ் கப்ராலாவ்

"போருக்கு பின்னால் உக்ரைனில் சினிமா முக்கியத்துவம் பெறும் என நினைக்கிறேன்" - உக்ரைனிய இயக்குநர் போரைப் பற்றியும் உக்ரைன் அதிபர் பற்றியும் சொல்வது இது தான்.

உக்ரைன்: "முதுகைச் சில்லிட வைத்த தருணம் அது" - போர் குறித்து திரைப்பட இயக்குநர்!

"போருக்கு பின்னால் உக்ரைனில் சினிமா முக்கியத்துவம் பெறும் என நினைக்கிறேன்" - உக்ரைனிய இயக்குநர் போரைப் பற்றியும் உக்ரைன் அதிபர் பற்றியும் சொல்வது இது தான்.

Published:Updated:
உக்ரைனியன் இயக்குநர் ஸ்டானிஸ்லாவ் கப்ராலாவ்

உக்ரைனியன் இயக்குநர் ஸ்டானிஸ்லாவ் கப்ராலாவ் (Stanislav Kapralov) கியூவில் இருந்து வடக்கு உக்ரைனுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். இக்கட்டான சூழலில் உக்ரைனை விட்டு அவர் வெளியேற விரும்பவில்லை. இந்தச் சூழல் நாட்டிற்கும் அதன் சினிமாவிற்கும் புதிய கதைகளை எழுதிக் கொண்டிருப்பதாக அவர் உணர்கிறார்.

"நான் தற்போது உக்ரைனில் இருக்கிறேன். படைக்கு அணிதிரட்டுவதன் காரணமாக ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. பெரும்பான்மையான ஆண்கள் வெளியேற விரும்புவதில்லை என்பதை நான் பார்க்கிறேன். இப்படியான கடினமான சூழலில் எல்லோருமே நாட்டின் பக்கம் நிற்கவே விரும்புகின்றனர். போருக்கு முன்பாக நான் ஒரு படம் இயக்கிக் கொண்டிருந்தேன். அதற்கான படப்பிடிப்பு செர்னோபில் பகுதியில் நடப்பதாக இருந்தது. இவர்களை வெளியற்றிய பிறகு அந்தப் பணியில் ஈடுபடும் நம்பிக்கையோடு இருக்கிறேன். படப்பிடிப்பு ஐரோப்பாவுக்கு மாற்றலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். புதிய படத்திற்காக அமெரிக்காவுக்கு செல்லவிருக்கிறேன். உக்ரைன் போருக்கு பின்னால் சினிமா இங்கு முக்கியத்துவம் பெறும் என நினைக்கிறேன்"

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

Let It Snow (2020), Egregor (2021) உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்டானிஸ்லாவ் தன்னுடைய தந்தையை அனுப்பி வைக்கும் செயலில் தான் எதிர்கொண்ட சிக்கல்களை விவரிக்கிறார். பிழைப்பதற்காக போராடுவதும் அங்கிருந்து வெளியேற திட்டமிடுவதுமே நகரத்தில் குழப்பம் ஏற்படும் போது நாம் செய்ய வேண்டியதாக இருக்கும்.

"வடக்கு உக்ரைன் பகுதியில் வெடி சத்தம் எதுவும் இல்லை. சில நாட்கள் அங்கு இருந்தேன், அதன் பிறகு ஐரோப்பியன் யூனியன் பகுதிக்கு குடும்பத்தை கொண்டு சென்றேன். தங்களுடைய திறமைகளை இந்தப் போரில் உபயோகித்து நாட்டைக் காக்க எல்லோருமே ஆயத்தமாக இருக்கிறார்கள்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"என்னுடைய தந்தையை கீவ் விட்டு வெளியேற்ற எல்லா ஏற்பாடும் செய்துவிட்டேன். வீட்டில் இருந்து நண்பர்கள் அப்பாவை பிக் அப் செய்ய காத்திருந்த பகுதிக்கு செல்வதற்கு இடையில் அபாய சங்கு ஒலிக்கத் தொடங்கிவிட்டது. நான் வருந்த தொடங்கிவிட்டேன். முதுகைச் சில்லிட வைத்த தருணம் அது. நல்ல வேளையாக எதுவும் நிகழவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு தந்தை வார்ஷா சென்றுவிட்டார். என்னுடைய பாட்டி கீவ் விட்டு வர மறுத்துவிட்டார்."

உக்ரேனியன் இயக்குநர் ஸ்டானிஸ்லாவ் கப்ராலாவ்
உக்ரேனியன் இயக்குநர் ஸ்டானிஸ்லாவ் கப்ராலாவ்
instagram

ஸ்டானிஸ்லாவ் போரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செயல்பாடு பற்றி சொல்கிறார், "யாருமே போருக்கு முன் ஜெலன்ஸ்கியை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த இக்கட்டான சூழலில் அவர் ஹீரோ போல செயல்படுகிறார். தினமும் போராடுகிறார், நாட்டின் முகமாகவும் ஆன்மாவாகவும் அவர் இருக்கிறார். நாங்கள் அவருக்கு பின் இருக்கிறோம். அவர் எங்களை வீழச் செய்ய மாட்டார், நாங்களும்" எனப் பேட்டி அளித்துள்ளார். மிக முக்கியமான பட நிறுவனங்களோடு பணியாற்றியவர் ஸ்டானிஸ்லாவ். "உலகெங்கிருந்தும் அநீதிக்கு எதிராக குரல் கொடுபப்து மகிழ்ச்சியளிக்கிறது. உக்ரைன் குடியரசு, அமைதி, நீதி எனும் கவசத்தில் இருக்கிறது. இந்த ஆதரவு தொடரும்" என்று முடிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism