Published:Updated:

விபத்தில் கால்களை இழந்த காதலி; மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட காதலர்; உக்ரைனில் நெகிழ்ச்சி!

ஒக்ஸானா

உக்ரைனில் வசித்து வரும் 23 வயது செவிலியரான ஒக்ஸானா, விக்டருடன் மார்ச் 27-ம் தேதியன்று தனது சொந்த ஊரான லிசிசான்ஸ்கிற்கு வழக்கமான பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கண்ணிவெடியின் மீது ஒக்ஸானா கால் வைத்துள்ளார்.

விபத்தில் கால்களை இழந்த காதலி; மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட காதலர்; உக்ரைனில் நெகிழ்ச்சி!

உக்ரைனில் வசித்து வரும் 23 வயது செவிலியரான ஒக்ஸானா, விக்டருடன் மார்ச் 27-ம் தேதியன்று தனது சொந்த ஊரான லிசிசான்ஸ்கிற்கு வழக்கமான பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கண்ணிவெடியின் மீது ஒக்ஸானா கால் வைத்துள்ளார்.

Published:Updated:
ஒக்ஸானா

வெடி விபத்தில் இரு கால்களையும் இழந்த உக்ரேனிய செவிலியர் தன் கணவருடன் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. லிவிவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட நெகிழ்ச்சியான இந்த வீடியோவில் இருவரும் திருமணம் செய்துகொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தும் காட்சி நெகிழவைக்கிறது. இந்த தம்பதிக்கு மருத்துவமனை சங்கமானது திருமண மோதிரம், உடை, கேக் ஆகியவற்றைத் தயார் செய்து கொடுத்ததோடு, அறுவை சிகிச்சை மையத்தின் வார்டில் திருமணத்தையும் நடத்திவைத்துள்ளது. 

அந்த வீடியோவில் திருமண உடையிலிருந்த காதலி ஒக்ஸானாவை ஒரு குழந்தைபோல கையில் ஏந்தி, சுற்றியபடி மணமகன் விக்டர் நடனமாடி, முத்தமிடுகிறார். மருத்துவமனையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை உக்ரைனின் பாராளுமன்றம் ட்விட்டரில் பகிர்ந்து `மிகவும் சிறப்பு வாய்ந்த காதல் கதை' என குறிப்பிட்டுள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உக்ரைனில் வசித்து வரும் 23 வயது செவிலியரான ஒக்ஸானா, விக்டருடன் மார்ச் 27-ம் தேதியன்று தனது சொந்த ஊரான லிசிசான்ஸ்கிற்கு வழக்கமான பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கண்ணிவெடியின் மீது ஒக்ஸானா கால் வைத்துள்ளார். விக்டரை எச்சரிக்கத் திரும்பிய  சில வினாடிகளிலேயே அந்த வெடி வெடித்தது. இந்த வெடி விபத்தில் தன் இரு கால்களையும், இடது கையில் உள்ள நான்கு விரல்களையும்  இழந்தார். அதிர்ஷ்டவசமாக விக்டர் எந்தக் காயங்களும் இன்றி தப்பினார். இதுவரை ஒக்ஸானாவுக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. நேரம் இல்லாமல் ஆறு வருடங்களாகத் திருமணத்தைத் தள்ளிப்போட்டு வந்த நிலையில், விபத்திற்குப்பின் மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism