Published:Updated:

அதிகம் கொன்றது அமெரிக்கப் படைகள்தான்!

ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

அதிகம் கொன்றது அமெரிக்கப் படைகள்தான்!

ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

Published:Updated:
ஆப்கானிஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ஆப்கானிஸ்தான்

`ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்தது பயங்கரவாதிகள்தான்’ என உலகம் நினைத்தது. `அப்பாவி மக்களைக் காப்பதுதான் எங்களின் ஒரே நோக்கம்!’ என்று இதுநாள் வரை ஆர்ப்பரித்து வந்தது அமெரிக்கா. ஆனால், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அதிக அளவில் பொதுமக்களைக் கொன்று குவித்தது பயங்கரவாதிகள் அல்லர்... அமெரிக்கக் கூட்டுப்படைகள்தான்’ என்று ஐ.நா-வின் கள அறிக்கை தெரிவிக்கிறது. இதனால், அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியதன் நோக்கம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்ற அறிவிப்புடன்தான் அமெரிக்கக் கூட்டுப்படை 2001-ல் ஆப்கானிஸ்தானில் இறங்கியது. பிறகு ஒபாமா பதவியேற்றவுடன், ``ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து, அல்-கொய்தா அமைப்பைச் சீர்குலைத்து, தோற்கடித்து, அகற்றி அமைதியை நிலைநாட்டுவதுதான் எங்களின் தலையாய பணி’’ என்று கர்ஜித்தார். ஆனால், அது வெறும் மாயை என்பதை ஐ.நா அறிக்கை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

அதிகம் கொன்றது அமெரிக்கப் படைகள்தான்!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 717 அப்பாவி மக்களை அமெரிக்கக் கூட்டுப்படை கொன்றுள்ளது. அதே காலகட்டத்தில் தாலிபான்கள் கொன்றவர்களின் எண்ணிக்கை அதைவிடக் குறைவுதான். அவர்கள் 531 பேரைக் கொன்றுள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவலை ஆப்கானிஸ்தானின் ஐ.நா உதவி கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தரைவழித் தாக்குதல்களால் ஏற்பட்ட மரணத்தைவிட, வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட இறப்பு அதிகம் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கப் படைகள்தான் இதுவரை அதிக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. அமெரிக்க விமானங்கள், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் 790 முறை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 847 முறை தாக்குதல் நடத்தியுள்ளன. வான்வழித் தாக்குதலில் காயம் அடைந்தவர்களைவிட இறந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக இருக்கிறது. இந்த 18 ஆண்டுகாலப் போரால், பொதுமக்களுக்குத்தான் அளவுக்கு அதிகமான தீங்குகள் விளைந்துள்ளன. இந்தத் தாக்குதல்கள், ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று, உயிர் தப்பியவர்களைத் துன்புறுத்தி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை இடம்பெயரவைத்துள்ளன. மேலும், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள், இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்கிறது அந்த அறிக்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எங்களைக் காத்துக்கொள்வதும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்களைக் காப்பதும் எங்கள் கடமை’’ என்கிறது அமெரிக்கா. ``பொதுமக்களின் உயிரிழப்புக்கு இருவரும்தான் பொறுப்பு. நிலைமையைப் புரிந்துகொண்டு, இருவரும் பொதுமக்கள் இறப்பைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்’’ என்று ஐ.நா அமைப்பின் தலைவர் டாடாமிச்சி யமமோடோ கறாராகக் கூறியுள்ளார்.

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்கா உள்ளாவது இது இரண்டாவது முறை. அமெரிக்கக் கூட்டுப்படையின் கொடூரச் செயல்கள் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009-ல் ஃபாரா மாகாணத்தின் ஒரு கிராமத்தில் நடந்த அமெரிக்கப் படையின் வான்வழி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதற்குப் பிறகு நடத்தப்பட்ட கள ஆய்வில், தாலிபான் பயங்கரவாதிகளைவிட அதிகமாக மக்களைக் கொன்றது அமெரிக்கக் கூட்டுப்படைதான் என்பது தெரியவந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா மீண்டும் அதே குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளது. 18 ஆண்டுகள் கழிந்தும் அமெரிக்காவால் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறவில்லை. இன்றும் 14,000 துருப்புகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளன. ``2020-க்குள் வெளியேறுவோம்’’ என்கிறது அமெரிக்கா.

தங்கள் ஆட்சி கவிழக் காரணமாக இருந்த அமெரிக்காவை, தாலிபான்கள் முழுமையாக நம்பவில்லை. தாலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஏழு சுற்றுகள் முடிவடைந்த பிறகும், ‘அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குவது, பயங்கரவாத தாக்குதல்களைத் தடுப்பது’ என்னும் தாலிபானின் இரு முக்கிய குறிக்கோள்களும் இன்னும் நிறைவேறவில்லை.

ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்
ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்புகளும் தற்கொலைத் தாக்குதல்களும் உயிரிழப்பு களும் அதிகரித்தனவே தவிர, குறையவில்லை. ஜூலை 28-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உதவி அதிபர் வேட்பாளர் அமருல்லாஹ் சாலே மயிரிழையில் உயிர் தப்பினார். ``அமெரிக்கத் துருப்புகள் வெளியேறும் வரை அமைதி திரும்பாது. குறைந்த பட்சம் செப்டம்பரில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் வரை இந்த நிலையில் மாற்றம் இருக்காது. தங்களைப் பலமுள்ளவராகக் காட்டிக் கொள்ள, இரு தரப்பினரும் வன்முறையைத் தூண்டி விடுகின்றனர்’’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 20,000 அப்பாவிப் மக்கள், 45,000 ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தாலிபான்களுக்கும் அதே அளவுக்கு இழப்பு. கூட்டுப் படை, 3,550 வீரர்களை இழந்துள்ளது. அதில் 2,000

பேர் அமெரிக்கர்கள். பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட போர், அப்பாவி மக்களைக் கொன்று கொண்டிருக்கிறது.

அமைதிப்படையே மக்களை வேட்டையாடுவது எந்தவிதத்தில் நியாயம்? கேட்க நாதியில்லாததால், வேலியே பயிரை மேய்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism