Published:Updated:

வீட்டில் சேர்த்துவைக்கப்பட்ட பெண்களின் 5,000 உள்ளாடைகள்... `உள்ளாடைத் திருடனை’ தேடும் போலீஸ்!

திருடன்

பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறித்துவைத்து திருடிய விசித்திரத் திருடன்... 5, 000 உள்ளாடைகளைப் பறிமுதல் செய்த போலீஸார்... எங்கு தெரியுமா?

வீட்டில் சேர்த்துவைக்கப்பட்ட பெண்களின் 5,000 உள்ளாடைகள்... `உள்ளாடைத் திருடனை’ தேடும் போலீஸ்!

பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறித்துவைத்து திருடிய விசித்திரத் திருடன்... 5, 000 உள்ளாடைகளைப் பறிமுதல் செய்த போலீஸார்... எங்கு தெரியுமா?

Published:Updated:
திருடன்

கார், பைக், பணம் எனப் பொருள்களின் திருட்டுகளையே நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு திருடனுக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கும் என்பதுகூட நாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், பெண்களின் உள்ளாடைகளையே குறிவைத்துத் திருடி அவற்றைத் தனது வீட்டிலேயே பதுக்கிவைத்திருந்த விசித்திரமான திருடன் குறித்து அறிந்த போலீஸாரே அதிர்ந்துவிட்டனராம்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னின் வடக்கிலுள்ள நீர்த்தேக்கம் பகுதியில் ஹிக்போர்ட் எனும் தெருவிலுள்ள ஒரு வீட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தரவின்பேரில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 5,000 -க்கும் மேற்பட்ட பெண்களின் உள்ளாடைகள் ஆண் ஒருவர் வசிக்கும் வீட்டில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

உள்ளாடைகள்
உள்ளாடைகள்

வடக்கு மெல்போர்னின் நீர்த்தேக்கம் பகுதியிலுள்ள வீடுகளில் தொடர்ச்சியாக நடந்தேறிவந்த கொள்ளைச் சம்பவங்களின் அடிப்படையில், போலீஸார் அந்த வீட்டில் சந்தேகத்தின்பேரில் சோதனை மேற்கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போதுதான் அங்கு 5,000-க்கும் அதிகமான உள்ளாடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பெண்களின் உள்ளாடைகள் மட்டுமல்லாமல், பெண்கள் உடற்பயிற்சியின்போது அணியும் வேறு ஆடைகளும் இருந்தன.

வடக்கு மெல்போர்னின் புறநகர்ப் பகுதிகளில் பெண்களின் உள்ளாடைகள், உடற்பயிற்சியின்போது அணியும் ஆடைகளைத் திருடியவர் யாராக இருந்தாலும் தாமாக முன்வந்து சரணடையுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

திருட்டு
திருட்டு

இந்த விசித்திரத் திருடன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் காவல்துறைக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியின் மூலம் தகவல் தெரிவிக்குமாறும் மெல்போர்ன் போலீஸார் கேட்டுகொண்டிருக்கின்றனர்.