Published:Updated:

இருளில் மூழ்கிய சீனா; வரலாறு காணாத மின் பற்றாக்குறை; என்ன காரணம்?

சீனாவில் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு தொழில் நிறுவனங்களைத் தாண்டி தற்போது வீடுகளையும் பாதித்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சமீப காலமாக இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவிற்குக் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்சாரத் தேவை அதிகரித்ததும் அதற்கு ஏற்ப உற்பத்தி இல்லாததும்தான் இந்த தட்டுப்பாட்டிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சீனாவைப் பொறுத்தவரை மின் உற்பத்திக்குப் பெரிதும் நிலக்கரியைத்தான் சார்ந்துள்ளது. நிலக்கரி தேவை அதிகரிக்க விநியோகம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் சீனாவில் நிலக்கரியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

சீனா மின் பற்றாக்குறை
சீனா மின் பற்றாக்குறை
AP

தொழிற்சாலைகளுக்குத் தங்களின் மின் தேவையைக் குறைத்துக்கொள்ளும்படி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மின் தட்டுப்பாடு காரணமாகப் பல்வேறு தொழிற்சாலைகள் தங்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளார். பல்வேறு பகுதிகளில் தொழில் முடங்கியுள்ளது. இதனால், நாட்டின் பொருள் வளர்ச்சி கடுமையாகப் பாதித்துள்ளது. அதுமட்டுமில்லாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது. சீனாவின் உற்பத்தியின் சரிவு சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி!
சீனா மின் பற்றாக்குறை
சீனா மின் பற்றாக்குறை
AP

சீனாவில் தொழிற்சாலைகளைத் தாண்டி தற்போது வீடுகளுக்கும் மின்தடை ஏற்பட்டுள்ளது. சீனாவில் தற்போது குளிர் காலம் என்பதால் வீடுகள் மற்றும் பிற இடங்களில் ஹீட்டர் பயன்படுத்தப்படும். தற்போது மின் வெட்டு காரணமாக ஹீட்டர் கூட பயன்படுத்த முடியாது இரவு நேரங்களில் உறையவைக்கும் குளிரில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு