Published:Updated:

உலகக் கோப்பை கால்பந்து போட்டி: LGBTQ-வுக்கு ஆதரவாக டி-ஷர்ட்... தடுத்து நிறுத்தப்பட்ட பத்திரிகையாளர்!

பத்திரிகையாளர்

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக வந்த அமெரிக்க பத்திரிகையாளர் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி: LGBTQ-வுக்கு ஆதரவாக டி-ஷர்ட்... தடுத்து நிறுத்தப்பட்ட பத்திரிகையாளர்!

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக வந்த அமெரிக்க பத்திரிகையாளர் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
பத்திரிகையாளர்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு விழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டுவருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. தற்போது இந்தப் போட்டி கத்தாரில் நடந்துவருகிறது. இந்த நிலையில், அமெரிக்கப் பத்திரிகையாளர் கிரான்ட்வாஹ்ல் என்பவர் செய்தி சேகரிப்பதற்காக கத்தாருக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்காகச் சென்ற அவர், LGBTQ+ சமூகத்துக்கு ஆதரவளிக்கும்விதமாக வானவில் வண்ணத்துடன் டி-ஷர்ட் அணிந்து சென்றிருக்கிறார். இதனால் அவரை கால்பந்து போட்டி நடக்கும் மைதானத்துக்குள் அனுமதிக்காமல் சிலர் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். மேலும் கத்தாரில் LGBTQ+க்கு அனுமதியில்லை. எனவே, வேறு ஆடையை மாற்றிக்கொண்டு வர வேண்டும் என அங்கிருந்தவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அதையடுத்து பத்திரிகையாளர் கிரான்ட்வாஹ்ல் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நான் இப்போது நன்றாக இருக்கிறேன். ஆனால் என் மீதான சோதனை தேவையற்றது. நான் ஊடக மையத்தில் இருக்கிறேன். இன்னும் அதே சட்டையை அணிந்திருக்கிறேன். அங்கிருந்தவர்கள் என்னை சுமார் அரை மணி நேரமாகத் தடுத்தி நிறுத்தினார்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, ஒரு பாதுகாப்பு அதிகாரி அந்த பத்திரிகையாரை அணுகி, மன்னிப்புக் கேட்டு அவரை அரங்குக்குள் அனுமதித்திருக்கிறார். மேலும் கால்பந்து சர்வதேச நிர்வாகக் குழுவான ஃபிஃபாவின் பிரதிநிதி ஒருவர் மன்னிப்புக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.