Published:Updated:

கலிபோர்னியாவின் கைவிடப்பட்ட தாண்டவாளத்தில் ஜாலியாக ஒரு பயணம்; வைரல் வீடியோ!

ரயில் வண்டி

கைவிடப்பட்ட ரயில் தண்டவாளங்கள் இருக்கும் பகுதிக்கு காரில் சென்று அங்கிருந்து யாருமில்லாத அந்தப் பாதைகளில் சுதந்திரமாக பயணம் போகிறார் ரயான்.

கலிபோர்னியாவின் கைவிடப்பட்ட தாண்டவாளத்தில் ஜாலியாக ஒரு பயணம்; வைரல் வீடியோ!

கைவிடப்பட்ட ரயில் தண்டவாளங்கள் இருக்கும் பகுதிக்கு காரில் சென்று அங்கிருந்து யாருமில்லாத அந்தப் பாதைகளில் சுதந்திரமாக பயணம் போகிறார் ரயான்.

Published:Updated:
ரயில் வண்டி

நீங்க ட்ரெயினில் சென்றிருக்கலாம். தண்டவாளத்தில் நடந்து கிராஸ் பண்ணியிருக்கலாம். ஓடுற ட்ரெயினை ஒத்த கையில் கூட நிறுத்தியிருக்கலாம். ஆனால் ட்ரெயின் தண்டவாளத்தின்மீது சொந்தமாக வண்டி செய்து அதை ஓட்டிக்கொண்டு போயிருக்கிறீர்களா?.. ஒருவர் அப்படி செய்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?

தெற்கு கலிபோர்னியாவின் வறண்ட பாலைவனம் அது. நடுவில் கைவிடப்பட்ட தண்டவாளத்தில் நான்கு சக்கரங்களுடன் பலகை போலான ஒரு வண்டியில் தலையில் தொப்பியுடன் சுற்றுலா காஸ்டியூமில் ஒருவர் ஜாலியாக ரைட் போகிறார். அருகில் ப்ரீசர் பாக்ஸ், தோள் பை சகிதம் கால் நீட்டி அமர்ந்தவாறே பயணிக்கும் அவரின் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இவர் பெயர் ரயான். தண்டவாளத்தில் ஓடும் இந்த வண்டியை எளிய பொருட்களைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார். இதில் ஒரு மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. வேகத்தைக் கட்டுப்படுத்தும் சிறிய லிவர் கொண்ட அமைப்போடு ஒரு வாகனத்தைச் சொந்தமாகத் தயார் செய்திருக்கிறார் ரயான். கைவிடப்பட்ட ரயில் தண்டவாளங்கள் இருக்கும் பகுதிக்கு காரில் சென்று, அங்கிருந்து யாருமில்லாத அந்த தண்டவாளத்தில் உலா செல்வது அவரது ஹாபி.

`ரயான் ரேன்டம்நெஸ்' என்கிற சேனலில் இந்த ரயில் வண்டியை எப்படி உருவாக்குவது என்று டுடோரியல் வீடியோ ஒன்றையும் அப்லோட் செய்திருக்கிறார்.

இந்த வீடியோவை Mark Tomasovic என்பவர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவிற்கு பலரும் தங்களின் கருத்துகளை ஜாலியான கமென்ட்டுகளாக பதிவு செய்து வருகிறார்கள்.

மக்களே அவர் காலியான தண்டவாளத்தில் தான் இந்த சாகசமெல்லாம் செய்கிறார் என்பதை மறந்துடாதீங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism