Published:Updated:

அமெரிக்கா: நியூயார்க் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரை பரிந்துரைத்த ஜோ பைடன்!

ஜோ பைடன்

அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியர் அருண் சுப்பிரமணியனை அதிபர் ஜோபைடன் நியமித்துள்ளார்.

அமெரிக்கா: நியூயார்க் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரை பரிந்துரைத்த ஜோ பைடன்!

அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியர் அருண் சுப்பிரமணியனை அதிபர் ஜோபைடன் நியமித்துள்ளார்.

Published:Updated:
ஜோ பைடன்
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதி அருண் சுப்பிரமணியன் என்ற சிறப்பை அவர் பெறுவார்.

அருண் சுப்பிரமணியன்
அருண் சுப்பிரமணியன்

நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள அருண் சுப்பிரமணியனுக்கு National Asian Pacific American Bar Association (NAPABA) வாழ்த்து தெரிவித்துள்ளது. அருண் சுப்பிரமணியன் அமெரிக்காவில் உள்ள Case Western Reserve University-யில் 2001 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டத்தையும் 2004 ஆம் ஆண்டு கொலம்பியா சட்டக்கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றவர். தற்போது நியூயார்க்கில் உள்ள Susman Godfrey LLP இல் பங்குதாரராக உள்ளார், அங்கு அவர் 2007 முதல் பணியாற்றி வருகிறார், திரு சுப்ரமணியன் 2006 முதல் 2007 வரை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க்கு சட்ட எழுத்தராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.