Published:Updated:

60 பாம்புகள், பல்லிகளை பேன்ட்டில் மறைத்துக் கடத்திய கடத்தல்காரர் - கைதுசெய்த போலீஸ்... என்ன நடந்தது?

பேன்ட்டில் பதுக்கி கடத்திய கடத்தல்காரர்!

அவருடைய மேல் சட்டை, பேன்ட் மற்றும் உடன் கொண்டுவந்திருந்த பைகளில் சுமார் 60 முதலைக்குட்டிகள், பாம்புக் குட்டிகள் மற்றும் ஊர்வன உயிரினங்களை மறைத்துக் கடத்திவந்தது தெரியவந்தது.

தெற்கு கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் ஜோஸ் மானுவேல் பேரெஸ். இவர் கடந்த ஆறு வருடங்களாக வனவிலங்குகளைச் சட்டவிரோதமாக நாடுவிட்டு நாடு கடத்திவந்திருக்கிறார். பேரெஸ் இதுவரை 1,700 விலங்குகளை ஹாங்காங், மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவுக்குக் கடத்திவந்திருக்கிறார்.

முப்பது வயதான இந்தக் கடத்தல்காரரை, கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி சான் யசிட்ரோ நுழைவு துறைமுகம் பகுதியில் போலீஸார் கைதுசெய்தனர். போலீஸார் ஜோஸ் மானுவேல் பேரெஸை சோதனையிட்டபோது, அவர் தன்னுடைய மேல் சட்டை, பேன்ட் மற்றும் உடன் கொண்டுவந்திருந்த பைகளில் சுமார் 60 முதலைக்குட்டிகள், பாம்புக்குட்டிகள் மற்றும் ஊர்வன உயிரினங்களை மறைத்துக் கடத்திவந்தது தெரியவந்தது.

கடத்தி வரப்பட்ட உயிரினங்கள்
கடத்தி வரப்பட்ட உயிரினங்கள்

அதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரை வனவிலங்கு கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைதுசெய்தனர்.

அவரை விசாரித்ததில், ஜோஸ் மானுவேல் பேரெஸ் தன்னுடைய சகோதரி உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து வனவிலங்குகளைச் சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் தங்கள் கடத்தலுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்திவந்திருக்கின்றனர்.

கடத்தி கொண்டு வரப்பட்ட  60 பாம்புகள், பல்லிகள்
கடத்தி கொண்டு வரப்பட்ட 60 பாம்புகள், பல்லிகள்

யுகடன் பாக்ஸ் ஆமைகள், மெக்ஸிகன் ஆமைகள் மற்றும் குட்டி முதலைகள் உள்ளிட்டவற்றை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு $739,000-க்கு விற்பனை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது பெரெஸ் தான் செய்த இரண்டு கடத்தல் சம்பவங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதனால் ஒரு கடத்தல் சம்பவத்துக்கு 20 ஆண்டுகள் என்ற கணக்கில் 40 ஆண்டுகள் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.