Election bannerElection banner
Published:Updated:

`அமெரிக்காவில் இன்னும் கொரோனாவுக்கு எதிரான திட்டம் இல்லை’ - அரசை விமர்சித்த விசில் ப்ளோயர்

ரிக் பிரைட்
ரிக் பிரைட் ( AP )

`அமெரிக்காவில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் முழுமையான திட்டம் எதுவும் இல்லை' என ரிக் பிரைட் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. வைரஸ் பரவலைத் தடுத்து சரிந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். ஊரடங்கில் தளர்வு விதித்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தைச் சரி செய்ய முடியும், அப்படி ஊரடங்கில் தளர்வு அறிவித்தால் மேலும் வைரஸ் பரவல் அதிகரிக்கும். இந்த இரண்டுக்கும் மத்தியில் சிக்கிச் செய்வதறியாது திணறி வருகிறார் ட்ரம்ப்.

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்
AP

வைரஸ் பரவலைவிட நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ள அவர், அமெரிக்காவில் மொத்தமாக ஊரடங்கில் தளர்வு அறிவிக்கும் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிபரின் கருத்துக்கு மாகாண ஆளுநர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் தேசிய கொரோனா நடவடிக்கை ஆலோசகராக உள்ள மருத்துவர் அந்தோணி ஃபாஸியும் அதிபரின் முடிவுக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துவிட்டார். அங்கு வைரஸைவிட ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் நடக்கும் மோதல்தான் பெரியதாக உள்ளது.

`எங்களால் முழு உறவையும் துண்டிக்க முடியும்’ - சீனாவுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் ட்ரம்ப்

இந்த நிலையில், அந்நாட்டின் விசில் ப்ளோயர் ஒருவரும் (whistleblower - ஒரு பொது அமைப்பில் நடக்கும் தவறு, குற்றங்களைச் சுட்டிக்காட்டி வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர்) அதிபருக்கு எதிரான தன் கருத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சுகாதார மற்றும் தனிமனித சேவைகள் ஆணையத்தின் இயக்குநராக இருந்தவர் ரிக் பிரைட் (Rick Bright). இவர் கொரோனா வைரஸைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்துக் கேள்வி எழுப்பியதால் கடந்த மாதம் தன் அரசாங்க பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நியூயார்க்
நியூயார்க்
AP

இதுதொடர்பாக நடந்த விசாரணையில் பேசிய விசில் ப்ளோயர் ரிக் பிரைட், ``முகமூடிகள், வைரஸ் சோதனை, சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பு உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் அமெரிக்க அரசு இன்னும் விரிவான செயல் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. நம் நாட்டில் இரண்டாவது அலை வந்தால் நவீன அமெரிக்க வரலாற்றில் இருண்ட குளிர்காலத்தைத்தான் நாம் எதிர்கொள்ள நேரிடும்.

`உங்கள் எச்சரிக்கையை ஏற்க முடியாது!’ -மருத்துவ ஆலோசகருடன் நேரடியாக மோதும் ட்ரம்ப்

கொரோனாவைத் தடுக்க நமக்கு இன்னும் விரிவான திட்டம் தேவை, அந்தத் திட்டம் என்ன.. அரசாங்கமும் மக்களும் அதில் என்ன பங்குவகிக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள நமது சுகாதாரப் பணியாளர்களைக் காக்க போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இன்னும் நம்மிடம் இல்லை. மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை எவ்வாறு விநியோகிக்கிறோம் என்பதற்கான திட்டமும் நம்மிடம் இல்லை. அதேபோல் கொரோனா பரிசோதனை செய்யும் விரிவான உத்தியும் இல்லை.

ரிக் பிரைட்
ரிக் பிரைட்
AP

இனி நாம் என்ன செய்தாலும் அறிவியலின் வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டும். நமக்கு இருந்த வாய்ப்புக்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டுவிட்டன. அறிவியலை அடிப்படையாகக் கொண்டு நம் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் அது தவறினால் தொற்றுநோய் பரவல் மோசமடையும் என நான் அஞ்சுகிறேன்” எனப் பேசியுள்ளார்.

இவரின் கருத்துக்குப் பதில் அளித்துள்ள ட்ரம்ப், பிரைட் ஒரு அதிருப்தி அடைந்த ஊழியரைப் போலப் பேசுவதாக விமர்சித்துள்ளார்.

நியூயார்க்கில் `ட்ரம்ப் மரண கடிகாரம்’ - கொரோனா விவகாரத்தில் அதிபரை விமர்சித்த இயக்குநர்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு