Published:Updated:

தாடையில் மோதிய செல்லப்பிராணி; தீவிர சிகிச்சையில் அமெரிக்கப் பெண்; விளையாட்டு விபரீதமான சம்பவம்!

செல்லப்பிராணி (Representational Image/pexels) ( pexels )

அப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் மூன்று நாள்களுக்கு பிறகு அவரால் எதையும் விழுங்க முடியவில்லை.

தாடையில் மோதிய செல்லப்பிராணி; தீவிர சிகிச்சையில் அமெரிக்கப் பெண்; விளையாட்டு விபரீதமான சம்பவம்!

அப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் மூன்று நாள்களுக்கு பிறகு அவரால் எதையும் விழுங்க முடியவில்லை.

Published:Updated:
செல்லப்பிராணி (Representational Image/pexels) ( pexels )

செல்லப்பிராணிகளைத் தன் உயிருக்கு மேலாக நேசிப்பவர்கள் உண்டு. ஆனால் அவற்றால் உயிருக்கே ஆபத்து நேரும் என்கிற நிலை துயரமானது. அமெரிக்காவில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம் செல்லப்பிராணி ப்ரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.

41 வயதான எரின் ஸ்டீபன்சன் Skyy என்கிற ( Staffordshire bull) ஸ்டாஃபோர்ட்ஷையர் புல் வகையைச் சேர்ந்த நாயைச் செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். வழக்கமாக ஸ்கை உடன் விளையாடிக் கொண்டிருந்த நாளில் எதிர்பாராத விதமாக அவரது தாடையில் ஸ்கை மோதிவிட்டது. அப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு அவரால் எதையும் விழுங்க முடியவில்லை.

உடனடியாக மருத்துவமனைக்குச் சென்ற எரினை சோதித்த மருத்துவர்கள் அவரது மெல்லும் பற்கள், தாடை ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தாடை மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். "அந்த நிகழ்வு என் முகம், கழுத்து பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மூச்சுவிட சிரமமான சூழல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்" எனத் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

செல்லப்பிராணி (Representational Image/ pexels)
செல்லப்பிராணி (Representational Image/ pexels)
pexels

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவை எல்லாவற்றைவிட தன் கணவர் இந்தச் சூழலில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார் எனத் தெரிவிக்கிறார் எரின். எரினுக்கு உணவு, நீர் செயற்கையான குழாய் வழியாக அளிக்கப்படுகிறது.

ஸ்கைக்கு 5 வயதாம். ஜனவரியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பொதுவாகவே செல்லப்பிராணிகள் உடன் விளையாடும்போது அவை அதிஉற்சாகமாகச் சுற்றி சுற்றி வருவதும் மனிதர்கள்மீது ஏறுவதும் நடக்கும். வீட்டிலேயே வளரும் பிராணிகளாக இருந்தாலும் நாம் தான் கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism