Published:Updated:

போனில் வேறொரு பெண் பேசியதால் ஆத்திரம்... காதலனின் வீட்டைக் கொளுத்திய காதலி! - அதிர்ச்சி சம்பவம்

காதலனின் வீட்டைக் கொளுத்திய காதலி ( பேஸ்புக் )

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

போனில் வேறொரு பெண் பேசியதால் ஆத்திரம்... காதலனின் வீட்டைக் கொளுத்திய காதலி! - அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
காதலனின் வீட்டைக் கொளுத்திய காதலி ( பேஸ்புக் )

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயதான செனைடா மேரி சொடோ (Senaida Marie Soto) என்ற பெண் ஒருவரைக் காதலித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், அந்தப் பெண் ஃபேஸ்டைம் எனும் செயலி மூலம் தன் காதலனுடன் வீடியோ சாட் செய்ய அழைத்திருக்கிறார். ஆனால், காதலன் வீட்டில் இருந்த வேறு யாரோ ஒரு பெண், அந்த அழைப்பை ஏற்று பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட செனைடா மேரி
கைதுசெய்யப்பட்ட செனைடா மேரி
ஃபேஸ்புக்

இதனால் ஆத்திரமடைந்த செனைடா மேரிஸ், காதலனின் வீட்டுக்கு அதிகாலை 2 மணிக்குச் சென்றிருக்கிறார். அவருடைய வீட்டுக்குள் புகுந்து பல பொருள்களைத் திருடிவிட்டு, அவரின் வீட்டுக்கு தீ வைத்திருக்கிறார். அதை வீடியோவாகப் பதிவுசெய்து காதலனுக்கும் அனுப்பியிருக்கிறார். இதனால், பதறிய காதலன் அறையைவிட்டு வெளியே வருவதற்குள் தீ வீடு முழுவதும் பரவியது. உடனே காவல்துறைக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்திருக்கிறார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை செனைடோ மேரியைக் கைதுசெய்திருக்கிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக செனைடோ மேரி காவல்துறையிடம், "என் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் இருந்ததால்தான் நான் வீட்டைக் கொளுத்தினேன்" என வாக்குமூலமும் அளித்திருக்கிறார்.

அமெரிக்க காவல்துறை
அமெரிக்க காவல்துறை
ட்விட்டர்

இது தொடர்பாக, ஊடகங்களிடம் பேசிய காதலன், ``இரவில் என்னுடைய வீட்டில் இருந்தது என் உறவுக்காரப் பெண். என்னுடைய பெற்றோரைச் சந்திக்க வந்திருந்தார். அப்போது அவர் விளையாட்டாக என் காதலியிடம் பேசியிருக்கிறார். ஆனால், அதற்குள் இவ்வளவு பெரிய சம்பவம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிகழ்வில் யாருக்கும், எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஆனால், ஏறத்தாழ 50,000 டாலர் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.