Published:Updated:

Viral Video: ஜிம்மில் தலைகீழாக மாட்டிக்கொண்டபெண்; தக்கசமயத்தில் கைகொடுத்த ஸ்மார்ட் வாட்ச்!

கிறிஸ்டைன் பால்ட்ஸ்

ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது தலைகீழாக மாட்டிக்கொண்ட பெண், ஸ்மார்ட் வாட்ச்சைப் பயன்படுத்தி மீண்டிருக்கிறார்.

Viral Video: ஜிம்மில் தலைகீழாக மாட்டிக்கொண்டபெண்; தக்கசமயத்தில் கைகொடுத்த ஸ்மார்ட் வாட்ச்!

ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது தலைகீழாக மாட்டிக்கொண்ட பெண், ஸ்மார்ட் வாட்ச்சைப் பயன்படுத்தி மீண்டிருக்கிறார்.

Published:Updated:
கிறிஸ்டைன் பால்ட்ஸ்

அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டைன் பால்ட்ஸ் (Christine Faulds). இந்த பெண் அதிகாலை 3 மணியளவில் பெரீயா என்ற இடத்தில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்வதற்காகச் சென்றிருக்கிறார். அவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது உபகரணம் ஒன்றில் தலைகீழாக மாட்டிக்கொண்டார். அவர் எவ்வளவு முயற்சித்தும் அதில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதனால் அவருக்கு ஜிம்மில் தெரிந்த நண்பரான ஜெசோன் என்பவரை அழைத்திருக்கிறார். ஆனால் அங்கு அதிக சத்தத்துடன் பாட்டு ஓடிக்கொண்டிருந்ததாலும், நண்பர் ஜெசோன் வேறு ஒரு அறையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாலும் அவரால் கிறிஸ்டைன் அழைப்பை கேட்கமுடியவில்லை.

இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார் கிறிஸ்டைன் பால்ட்ஸ். இந்த நிலையில் தலைகீழாக மாட்டிக்கொண்டிருந்த கிறிஸ்டைனுக்கு கைக்கொடுத்தது அவருடைய ஸ்மார்ட் வாட்ச்தான். அவர் தனது ஸ்மார்ட் வாட்ச் மூலம் 911 என்ற காவல்துறை எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். பின் ஜிம்மிற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் கிறிஸ்டைனை மீட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கிறிஸ்டைன் கூறுகையில், நான் தலைகீழாக உபகரணத்தில் மாட்டிக்கொண்டேன். என்னால் மேலே எழுந்திருக்க முடியவில்லை. ஜிம்மில் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்தார். என்னால் மற்ற எண்ணை தேட முடியவில்லை. அதனால்தான் காவல் நிலையத்திற்கு தொடர்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.