Published:Updated:

Pearl Harbour தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க மாலுமி - 80 ஆண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கல்லறை!

கல்லறை - அமெரிக்கா

1941, டிசம்பர் 7-ல் அமெரிக்கக் கப்பற்படைமீது ஜப்பான் கப்பற்படை தாக்குதல் நடத்தியதில் இறந்த ஜார்ஜ் கில்பர்ட் எனும் மாலுமிக்குக் கடந்த திங்களன்று முறையாகக் கல்லறை கட்டப்பட்டுள்ளது.

Pearl Harbour தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க மாலுமி - 80 ஆண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கல்லறை!

1941, டிசம்பர் 7-ல் அமெரிக்கக் கப்பற்படைமீது ஜப்பான் கப்பற்படை தாக்குதல் நடத்தியதில் இறந்த ஜார்ஜ் கில்பர்ட் எனும் மாலுமிக்குக் கடந்த திங்களன்று முறையாகக் கல்லறை கட்டப்பட்டுள்ளது.

Published:Updated:
கல்லறை - அமெரிக்கா

மேற்கு அமெரிக்காவின், ஹவாய் தீவின் பேர்ல் ஹார்பர் எனும் துறைமுகத்தில், 1941-ம் ஆண்டு, டிசம்பர் 7-ல் அமெரிக்கக் கப்பற்படைமீது ஜப்பான் கப்பற்படை தாக்குதல் நடத்தியது. அதில் இறந்த ஜார்ஜ் கில்பர்ட் எனும் அமெரிக்க மாலுமிக்கு 80 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை முறையான கல்லறை கட்டப்பட்டிருக்கிறது.

ஜார்ஜ் கில்பர்ட் இறக்கும்போது அவருக்கு 20 வயது. POW/MIA எனும் பாதுகாப்பு கணக்கியல் முகமையின் (DPAA) இணையதளத்தில் உள்ள அவரின் சுயவிவரப்படி, கில்பர்ட் கப்பற்படையில் சேர்ந்த பிறகு அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஓக்லஹோமாவில் ஃபயர் கன்ட்ரோல்மேனாக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். பின்னர் இந்தத் தாக்குதலில் ஜப்பானின் டார்பிடோக்களால் தாக்கப்பட்ட யு.எஸ்.எஸ் ஓக்லஹோமா கப்பல் கடலில் மூழ்கியது. அப்போது, கப்பலிலிருந்த ஜார்ஜ் கில்பர்ட் உட்பட மாலுமிகள், கப்பற்படையினர் என மொத்தம் 429 பேர் உயிரிழந்தனர்.

ஜார்ஜ் கில்பர்ட் அடக்கம்
ஜார்ஜ் கில்பர்ட் அடக்கம்

அந்தச் சம்பவத்தில், கில்பெர்ட்டின் எச்சங்கள் மீட்கப்பட்டபோதிலும் சரியாக அடையாளம் காண முடியாததால், அவரின் சுயவிவரப்படி ஹோனாலூலூவில் உள்ள பஞ்ச்பௌல் என அழைக்கப்படும் பசிபிக் தேசிய நினைவு கல்லறையில் அவர் அறியப்படாதவராகப் புதைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2015-ல் DPAA, கப்பலுடன் தொடர்புடைய எச்சங்களைத் தோண்டி அடையாளம் காண அனுமதி வாங்கி, ஆயுதப்படை மருத்துவ பரிசோதனை அமைப்பின் விஞ்ஞானிகள், மானுடவியல் மற்றும் மைட்டோகாண்ட்ரியல் DNA பகுப்பாய்வு உள்ளிட்ட நடைமுறைகளை மேற்கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்லறை - அமெரிக்கா
கல்லறை - அமெரிக்கா

இந்த நிலையில்தான், ஜார்ஜ் கில்பர்ட்டுக்கு தற்போது கல்லறை கட்டப்பட்டிருக்கிறது. ஜார்ஜ் கில்பர்ட்டின் பேத்தி ஷெல்லி கோஃப், அவரின் இரண்டு மகன்களும் கலந்துகொள்ள, பஞ்ச்பௌலில் கில்பர்ட்டின் கல்லறை திறக்கப்பட்டிருக்கிறது என ஃபேஸ்புக்கில் பசிபிக் வரலாற்றுப் பூங்கா தகவல் தெரிவித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism