ஒரு சிறிய கற்பனையே பல கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகியிருக்கிறது. அந்த வகையில் விமானப் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் பறக்கும் ஹோட்டல் ஒன்று அறிமுகமாகவுள்ளது. எப்போதும் வானில் பறந்து கொண்டிருக்கும் சொகுசு ஓட்டலை உருவாக்கும் வகையில் ஹஷம் அல்- கைலி என்ற ஏமன் நாட்டின் அறிவியல் தொடர்பாளர் ஸ்கை க்ரூஸ் என்ற பறக்கும் ஹோட்டலை வீடியோவாக உருவாக்கி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.கீழே தரை இறங்காமல் இருப்பதற்கு இந்த விமானத்தில் 20 அணுசக்தி என்ஜின்ஸ் ,பெஹிமோத் என்ற எரிபொருள் பயன்படுத்தப்படும் என்று அதன் வடிவமைப்பாளர் கூறுகிறார்.

இந்த பிரமாண்ட சொகுசு விமானம் ஒரு முறை பறக்க ஆரம்பித்துவிட்டால் திரும்ப தரை இறங்காது.மேலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தியேட்டர், ஷாப்பிங் மால், உடற்பயிற்சி மையங்கள், உணவகங்கள் என ஒரு ஸ்மால் சிட்டி போல இருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் விமானியே இல்லாமல் செயற்கை நுண்ணறிவு மூலம் விமானம் இயங்க உள்ளதுதான். தனித் தனி படுக்கை அறைகள் , நீச்சல் குளங்கள் ,திருமணம் நடைபெறுவதற்கு என்று சிறப்பு ஹால்கள் என அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைய இருக்கிறது. இப்படி பறக்கும் விமானத்தின் வீடியோ காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கிறது அந்த வீடியோ. ஹஷேம் அல்-கைலி (Hashem Al- Ghaili) வடிவமைத்த விமானத்தில் 5000 பேர் வரை பயணிக்கலாம். பயங்கரமான ஐடியா என சிலர் கமென்ட் பதிவிட, இதுலாம் நம்புற மாதிரியா இருக்கு என சிலர் கலாய்த்தும் இருக்கிறார்கள்.
