Published:Updated:

ரஷ்ய பீரங்கியை டிராக்டரில் கட்டி ஓட்டிச் செல்லும் உக்ரைன் விவசாயி - Viral Video

உக்ரைன் ( ட்விட்டர் )

உக்ரைன் விவசாயி ஒருவர் ரஷ்ய டேங்கர் போர் வாகனத்தைத் தனது டிராக்டரில் கட்டி ஓட்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ரஷ்ய பீரங்கியை டிராக்டரில் கட்டி ஓட்டிச் செல்லும் உக்ரைன் விவசாயி - Viral Video

உக்ரைன் விவசாயி ஒருவர் ரஷ்ய டேங்கர் போர் வாகனத்தைத் தனது டிராக்டரில் கட்டி ஓட்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Published:Updated:
உக்ரைன் ( ட்விட்டர் )

ரஷ்யா - உக்ரைன் இடையே 6-வது நாளாக யுத்தம் தொடர்கிறது. கீவ் நகரில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் தொடுத்துவருகிறது. உக்ரைன் அரசு ரஷ்யாவுக்கு எதிராகக் குடிமக்களும் போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

அதைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் குடிமக்களும், இன்னும் பல பிரபலங்களும் ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்று ரஷ்யப் படைகளை எதிர்த்துவருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல செய்தி நிறுவனமான NDTV, தனது ட்விட்டர் பக்கத்தில் வைரல் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறது. அந்த வீடியோவில், உக்ரைன் விவசாயி ஒருவர் ரஷ்யப் படை வீரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, தனது டிராக்டர் மூலம் ரஷ்ய டேங்கர் ஒன்றைக் கட்டி ஓட்டிச் செல்கிறார். அந்த டிராக்டருக்குப் பின்னால் ஒரு ரஷ்ய வீரர் ஓடுவதுபோல அந்த வீடியோ முடிகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism