Published:Updated:

சீனா: 6 வயது சிறுவனுக்கு கொரோனா... பரிசோதனைக்கு பயந்து மால்-ஐ விட்டு ஓடிய மக்கள்! | வைரல் வீடியோ

பரிசோதனைக்கு பயந்து மால்-ஐ விட்டு ஓடிய மக்கள் ( ட்விட்டர் )

சீனாவில் ஷாப்பிங் மாலுக்குச் சென்ற சிறுவனுக்கு கொரோனா உறுதியானதையடுத்து, அங்கிருந்தவர்கள் பரிசோதனைக்கு பயந்து ஓடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கடந்த சில தினங்களாக இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் நிலையில், கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் 6 வயது சிறுவன் ஒருவன் அங்கிருக்கும் ஷாப்பிங் மாலுக்குச் சென்றிருக்கிறான். அப்போது அவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆகஸ்ட் 13-ம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவலையடுத்து அங்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த மால்-ஐ மூட திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் உள்ளே இருந்த வாடிக்கையாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தவும் முடிவெடுத்திருக்கின்றனர். இந்த நிலையில், மருத்துவப் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளுக்கு பயந்து மக்கள் அந்த மாலிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேற முயன்றிருக்கின்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.