Published:Updated:

போர் ரவுண்ட்-அப்

 இஸ்ரேல் - பாலஸ்தீன்
பிரீமியம் ஸ்டோரி
இஸ்ரேல் - பாலஸ்தீன்

சீனா, தைவானைத் தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனச் சொந்தம் கொண்டாடுகிறது. அதை மறுக்கும் தைவானோ தங்களைத் தன்னுரிமை பெற்ற தனிநாடு என்கிறது

போர் ரவுண்ட்-அப்

சீனா, தைவானைத் தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனச் சொந்தம் கொண்டாடுகிறது. அதை மறுக்கும் தைவானோ தங்களைத் தன்னுரிமை பெற்ற தனிநாடு என்கிறது

Published:Updated:
 இஸ்ரேல் - பாலஸ்தீன்
பிரீமியம் ஸ்டோரி
இஸ்ரேல் - பாலஸ்தீன்
போர் ரவுண்ட்-அப்
போர் ரவுண்ட்-அப்

உக்ரைன் - ரஷ்யா

175 நாள்களைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது உக்ரைன் - ரஷ்யா போர். போர்த்தீவிரம் இன்னும் குறைந்தபாடில்லை. உக்ரைனின் ஸபோரிஸ்ஸியா நகர அணுமின் நிலையத்தைக் கைப்பற்றிய ரஷ்யா, அந்தப் பகுதிகளில் தனது ராணுவத் தளங்களை வேகமாக அமைத்துவருகிறது. மேலும், கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதலையும் நடத்திவருகிறது. அதற்குக் கொஞ்சமும் அசராத உக்ரைன் ராணுவம், துல்லியமான எதிர்த் தாக்குதலை நடத்திவருகிறது. குறிப்பாக, தெற்கு உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியான கிரீமியாவில் உள்ள சாகி ராணுவ விமான தளம், கருங்கடல் கடற்படையின் 43-வது சுதந்திரக் கடற்படை விமான தளங்களின்மீது ராக்கெட் ஏவுகணை களைக்கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில், ரஷ்யாவின் Su-24, Su-30 ரகப் போர் விமானங்கள், Ka-52, Mi-8 ரக ஹெலிகாப்டர்கள் தீக்கிரையாகின. மேலும், வெடிமருந்து கிடங்கொன்றும் வெடித்துச் சிதறி யிருக்கிறது. தொடர்ந்து தீவிரமடைந்துவரும் போர் குறித் துப் பேசியிருக்கும் ரஷ்ய அதிபர் புதின், ‘‘உக்ரைன்-ரஷ்யா போரை நீடிக்க அமெரிக்கா முயல்வதையே உக்ரைன் நிலைமை காட்டுகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன், தைவான் என மோதல் உள்ள பகுதிகளில், தொடர்ந்து போரை நீட்டிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா செயல்பட்டுவருகிறது. உலகின் எல்லாப் பகுதிகளிலும், நிலைமையைச் சீர்குலைத்துக் குழப்பமடையச் செய்ய நினைக்கும் வழக்கமான அமெரிக்க உத்திதான் இது” எனக் கடுமையாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்!

போர் ரவுண்ட்-அப்

தைவான் - சீனா

சீனா, தைவானைத் தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனச் சொந்தம் கொண்டாடுகிறது. அதை மறுக்கும் தைவானோ தங்களைத் தன்னுரிமை பெற்ற தனிநாடு என்கிறது. பல ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருந்த இந்தச் சர்ச்சை, இந்த மாதத் தொடக்கம் முதல் தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி சீனாவின் கடுமையான எதிர்ப்பை யும் மீறி, அமெரிக்க நாடாளுமன்றச் சபாநாயகரான நான்சி பெலோசி தைவானில் கால்பதித்தார். இதனால் ஆத்திர மடைந்த சீனா, தீவு நாடான தைவானை மிரட்டும் வகையில் நாட்டின் எல்லைப் பகுதியில் போர் விமானங்கள், போர்க் கப்பல்களைக் குவித்து தீவிரமான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. பத்து நாள்களாகத் தொடர்ந்த இந்தப் போர்ப் பதற்றம் சற்றுத் தணிந்த நிலையில், தற்போது பெலோசியைத் தொடர்ந்து மேலும் ஐந்து பேர்கொண்ட அமெரிக்க எம்.பி-க்கள் குழு தைவானுக்கு வருகை தந்திருக்கிறது. தைவான் தலைவர்களைச் சந்தித்து வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திய இந்தக் குழு, அடுத்த சில வாரங்களில் தைவான் பாதுகாப்புக் காகப் போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அனுப்புவ தாகத் தெரிவித்திருக்கிறது. இதனால் மிகக் கடுமையாக ஆத்திரமடைந்திருக்கும் சீனா, மீண்டும் தைவானைச் சுற்றிய பகுதிகளில் தீவிரப் போர்ப்பயிற்சியைத் தொடங்கியிருக்கிறது.

போர் ரவுண்ட்-அப்
போர் ரவுண்ட்-அப்

இஸ்ரேல் - பாலஸ்தீன்

பல தசாப்தங்களாக நீடித்துவரும் இஸ்ரேல் பாலஸ்தீன் இடையேயான போர், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றழித்து வருகிறது. பெரும்பாலும், இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீன் மக்கள் இறப்பதே அதிகம். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி, இஸ்ரேல் ராணுவம் பாலஸ் தீனத்தின் காஸா பகுதியைக் குறிவைத்துத் தனது தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலில், பாலஸ்தீன் அல்-குத்ஸ் படைப்பிரிவின் தளபதி டைசிர் அல்-ஜபாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். 55 பேர் படுகாயமடைந்தனர். இதில், அலா குதும் என்ற 5 வயது சிறுமியின் மரணம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியெடுத்திருக்கிறது. தொடர்ந்து நீடித்துவரும் இஸ்ரேலின் தாக்குதலில், இதுவரை 15 குழந்தைகள் உட்பட 44 பாலஸ்தீன பொதுமக்கள் பலியாகியிருக்கின்றனர். 350 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். ஏராளமான அடுக்குமாடிக் கட்டடங்கள், அகதி முகாம்கள் தரைமட்ட மாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த எகிப்து அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கடந்த ஆண்டு பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், 11 நாள்கள் தொடர்ந்து நடந்த இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் படையினருக்கு இடையேயான மோதலைவிட இந்தத் தாக்குதல் கோரமானதாகக் கருதப்படுகிறது.

போர் ரவுண்ட்-அப்
போர் ரவுண்ட்-அப்

இராக் - துருக்கி

இராக்கின் வடக்குப் பிராந்தியத்தை நோக்கிய தாக்குதல் நடவடிக்கையை, கடந்த ஏப்ரல் மாதம் முதலே தொடங்கிவிட்டது துருக்கி. குறிப்பாக, கடந்த ஜூலை 20-ம் தேதி இராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தின் ஸாக்கோ மாவட்டத்தை நோக் கிப் பறந்த துருக்கி விமானங்கள், அங்கிருக்கும் பூங்காவின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தின. இதில் ஒன்பது சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயமடைந் தனர். இந்தத் தாக்குதலுக்கு துருக்கிப் படைகள்தான் காரணம் எனக் குற்றம்சாட்டிய இராக் பிரதமர் முஸ்தஃபா அல்-காதிமி “துருக்கிப் படைகள் இராக்கின் இறை யாண்மையை அப்பட்டமாக மீறிவிட்டன” எனக் கடுமையாகச் சாடினார். ஆனால் துருக்கி, இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. இந்த நிலையில், ஜூலை 27-ம் தேதி, இராக்கின் மொசூல் நகரிலுள்ள துருக்கித் தூதரகம் தாக்கப்பட்டது. இதற்கு துருக்கி கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, இராக், துருக்கி இடையே தூதரகரீதியிலான மோதல் வெடிக்க, துருக்கியில் இருந்த தனது தூதரக அதிகாரிகளை இராக் திரும்பப் பெற்றிருக்கிறது. மேலும், துருக்கிக் கொடிகளை எரித்து, இராக் மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதையடுத்து துருக்கிக்கும் இராக்குக் கும் இடையே போர்ப்பதற்றம் நிலவிவருகிறது.