Published:Updated:

காலாவதியான பொருளுடன் ஏன் வேலை செய்ய வேண்டும்? - நேருக்கு நேர் அதிபரை வறுத்தெடுத்த பிரான்ஸ் செவிலியர்

பிரான்ஸ்
News
பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டு மருத்துவப் பணியாளருக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் சம்பளம் வழங்கப்படுவதில்லை எனச் செவிலியர் ஒருவர் அதிபரிடம் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் அனைத்து உலக நாடுகளும் வைரஸுக்கு எதிராகப் பெரும் போரை நடத்தி வருகின்றன. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 -க்கும் மேற்பட்ட பிற நாடுகளில் தலா 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

பிரான்ஸ்
பிரான்ஸ்
AP

சர்வதேசக் கொரோனா பாதிப்புப் பட்டியலில் பிரான்ஸ் 7-வது இடத்தில் உள்ளது. அங்கு சுமார் 1,79,365 பாதிக்கப்பட்டு 27,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு பாரீஸில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்யச் சென்ற அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை, மருத்துவர்களும் செவிலியர்களும் நேருக்கு நேராக நின்று வறுத்தெடுத்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் முன்னணி மருத்துவமனையாக பாரீஸில் இருக்கும் பிட்டி -சல்பெட்ரியேர் (Pitie-Salpetriere) மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவதும், பலர் குணமடைந்து வீடு திரும்புவதுமாக உள்ளனர். இதனால் அங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் இடைவிடாது வேலை செய்து வருகின்றனர். இரு நாள்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையையும், கொரோனா நோயாளிகளின் நிலையையும் பற்றி ஆய்வு செய்ய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் திடீரென அங்கு சென்றுள்ளார்.

இமானுவேல் மெக்ரான்
இமானுவேல் மெக்ரான்

மருத்துவமனையில் அதிபர் வருகையை எதிர்பார்க்காத மருத்துவர்களும் செவிலியர்களும் ஒரே இடத்தில் கூட்டமாகத் திரண்டனர். பின்னர் நேராக அதிபரிடம் சென்று தங்கள் குறைகளைக் கூறி முறையிட்டுவிட்டு, பிரான்ஸ் அரசு தங்களைக் காப்பாற்றாது என வெளிப்படையாக விமர்சித்துள்ளனர். உரிய சம்பளம் வழங்கவில்லை, போதுமான பாதுகாப்புக் கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லை என்பதே அவர்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிபர் முன் பேசிய ஒரு செவிலியர், “ நான் இங்கு கடந்த 6 வருடங்களாக வேலை செய்து வருகிறேன். இங்கே எந்த மருத்துவ உபகரணங்களும் இல்லை. எங்களிடம் எதுவுமே இல்லை. 2001-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு காலாவதியான அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் முகமூடியை இன்னமும் அணிந்துகொண்டு நாங்கள் ஏன் இங்கு வேலை செய்ய வேண்டும்? .இனி நாங்கள் உங்களை நம்பப்போவது இல்லை. ஐரோப்பாவை நினைத்து உண்மையில் நாங்கள் அவமானப்படுகிறோம்” எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.

பிரான்ஸ்
பிரான்ஸ்
AP

அப்போது குறுக்கிட்ட அதிபர் இம்மானுவேல், கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவப் பணியாளர்களுக்கு முன்னதாக சம்பள உயர்வும் போனஸும் வழங்கியதாக அந்த செவிலியருக்கு நினைவுபடுத்தினார். பின்னர் தொடர்ந்த செவிலியர், “ஆம் போனஸ் அளித்தீர்கள், நாங்கள் அதைப் பெற்றுக்கொண்டோம். இருந்தும் உலகிலேயே மிகக் குறைந்த ஊதியம் பெரும் செவியர்கள் கொண்ட நாடுகளில் பிரான்ஸும் ஒன்று. உங்களின் ஒவ்வொரு வாக்குறுதியுடனும் சில நிபந்தனைகளையும் நீங்கள் சேர்க்கிறீர்கள். இதனால் எங்கள் ஊதியத்தில் பெரிதாக எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை” எனச் செவிலியர் கூறினார்.

செவிலியரின் விமர்சனத்தை எதிர்பார்க்காத அதிபர், அவரது பேச்சுக்குப் பதில் கொடுக்க முடியாமல் திணறியுள்ளார். பின்னர் சுதாரித்துக்கொண்டு தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். சுற்றியிருந்தவர்கள் செவிலியரைத் தடுத்த போது, அவர் பேசட்டும் என அதிபர் செவிலியரைப் பேச அனுமதித்து அவருக்குப் பதிலும் அளித்துள்ளார். அதிபருடன் செவிலியர் நேருக்கு நேர் பேசியதால் அந்த இடமே பதற்றமாகியுள்ளது. இறுதியாகத் தேசிய சுகாதார அமைப்பில் நடந்த தவறுகளைத் தான் ஒப்புக்கொள்வதாக இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

பின்னர் தன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றிக் கூறி மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து அந்த இடமே விரும்பத் தகாத பகுதியாக மாறவே, ‘நான் செல்ல வேண்டும்’ எனக் கூறி அங்கிருந்து புறப்படுவதாகக் கூறியுள்ளார். அதற்கு, ‘நாங்களும் செல்ல வேண்டும் நோயாளிகள் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்’ எனக் கூறி செவிலியர்களும் கலைந்து சென்றனர். மேக்ரானுடன் செவிலியர் பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.