Published:Updated:

``அம்மா, சொர்க்கத்தில் சந்திப்போம்!” - உக்ரைன் போரில் தாயை இழந்த சிறுமியின் நெஞ்சை உருக்கும் கடிதம்

சிறுமியின் கடிதம் ( ட்விட்டர் )

உக்ரைன் போரில் தன் தாயை இழந்த சிறுமி, தன்னுடைய தாயை மறக்க முடியாமல் டைரியில் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

``அம்மா, சொர்க்கத்தில் சந்திப்போம்!” - உக்ரைன் போரில் தாயை இழந்த சிறுமியின் நெஞ்சை உருக்கும் கடிதம்

உக்ரைன் போரில் தன் தாயை இழந்த சிறுமி, தன்னுடைய தாயை மறக்க முடியாமல் டைரியில் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

Published:Updated:
சிறுமியின் கடிதம் ( ட்விட்டர் )

உலக நாடுகளே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் ரஷ்யா-உக்ரைன் போர் இந்த நூற்றாண்டின் மூன்றாம் உலகப் போராகவே பார்க்கப்பட்டுவருகிறது. இந்தப் போரை நிறுத்தக் கோரி பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன. ஆனால் ரஷ்யா தனது தாக்குதலை தொடரவே செய்கிறது. உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சாரை சாரையாகப் புலம்பெயர்ந்துவருகின்றனர். இந்த நிலையில், உக்ரைன் போரில் தன் தாயை இழந்த 9 வயது சிறுமி, தன்னுடைய தாயை மறக்க முடியாமல் டைரியில் எழுதிய கடிதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கடிதத்தை உக்ரைனின் உள்துறை அமைச்சர் ஆன்டேன் கெராஷ்சென்கோ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் கடிதத்தில் அந்தச் சிறுமி, ''அம்மா... நீங்கள் இந்த உலகத்தில் சிறந்த அம்மா. நான் உங்களை எப்பொழுதும் மறக்க மாட்டேன். நீங்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் நல்லவிதமாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு சொர்க்கத்துக்கு வருவேன். நான் சொர்க்கத்தில் உங்களைச் சந்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் படிப்போரை உருகவைக்கும்விதமாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism