Published:Updated:

இலங்கை: ``என் குடும்பமும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது" - முன்னாள் கிரிக்கெட் வீரர்!

ரொஷான் மஹானாமா

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹானாமா (Roshan Mahanama) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்துப் பேசியுள்ளார்.

இலங்கை: ``என் குடும்பமும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது" - முன்னாள் கிரிக்கெட் வீரர்!

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹானாமா (Roshan Mahanama) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்துப் பேசியுள்ளார்.

Published:Updated:
ரொஷான் மஹானாமா

1996-ல் இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது. அதில் அங்கம் வகித்த இலங்கை அணியின் வீரர் ரொஷான் மஹானாமா (Roshan Mahanama) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து பேசியுள்ளார். இந்த நெருக்கடிக்குக் காரணம் நாட்டின் தலைவர்கள்தான் என்று குற்றம் சாட்டிய அவர், 'நமக்கு நேரமில்லை. நாட்டின் தலைவர்கள்தான் இந்த நெருக்கடிலிருந்து மீள்வதற்கான முடிவுகளை எடுப்பதற்கு பொறுப்பானவர்கள்' என்று கூறியுள்ளார். இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், 'நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தபோது என்னுடைய நல்ல காலங்களிலும் கேட்ட காலங்களிலும் இலங்கை மக்கள் என்னுடன் இருந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் சார்பாக பேச வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்' என்று கூறினார்.

ரொஷான் மஹானாமா
ரொஷான் மஹானாமா

மேலும், 'நாட்டில் நடுத்தர வர்க்கத்தினர் மெல்ல மெல்ல அழிந்து வருவதை உணர்கிறேன். அதனால்தான் அனைவரும் வீதிக்கு வருகிறார்கள். இறுதியாக, உங்களிடம் பெட்ரோல், மின்சாரம், பால் பவுடர், அத்தியாவசியப் பொருட்கள் என எதுவும் இருக்காது. இந்நிலையில் தலைவர்கள்தான் தங்கள் குடிமக்களை நன்றாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நமக்கு நேரமில்லை. நாட்டின் தலைவர்கள்தான் இந்த நெருக்கடிலிருந்து மீள்வதற்கான முடிவுகளை எடுப்பதற்கு பொறுப்பானவர்கள். அவர்கள் சில முக்கிய முடிவுகள் எடுக்கும் வரை மக்கள் போராட்டம் நடத்துவார்கள். அவர்கள் தீர்வுகளைக் கொண்டு வரத் தொடங்கும் வரை நமது ஏமாற்ற நிலையைக் காட்டுவது முக்கியம்' என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரொஷான் மஹானாமா
ரொஷான் மஹானாமா

இந்தியா பற்றிக் கூறிய அவர், 1991-ல் இதே போன்ற பிரச்னை இந்தியாவிலும் நிலவியதாகவும், இலங்கைக்கு இந்தியா எப்பொழுதும் உறுதுணையாக இருந்து வருகிறது, நல்ல மற்றும் கெட்ட காலங்களில் எப்போதும் உடன் இருந்தது என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் வசதியான பின்னணியிலிருந்து வந்தவர்களே பொருளாதார நெருக்கடி உள்ளதால் உணவைத் தவிர்ப்பதாகவும், சாமானிய மக்கள் என்ன செய்வார்கள். இதில் தன்னுடைய குடும்பமும் நெருக்கடிகளை அனுபவித்து வருவதாகவும் இந்த இக்கட்டான நிலையில் எல்லோரும் இணைந்து அனைவருக்கும் உதவ வேண்டும். இந்த சூழலில் அண்டைநாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரவேண்டும் என்று கூறியிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism