Published:Updated:

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு `கொரோனா’ வைரஸ் பாதிப்பா? இது சீன குபீர்! #Coronavirus

சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால், அவரின் கட்சியினரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

`கொரோனா...' சீன மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டிருக்கிறது. `இதுவரை உலக அளவில் 811 பேர் கொரானா வைரஸ் பாதிப்பால் மரணித்திருக்கிறார்கள்' என, சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. தற்போதைய நிலையில் 37,198 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. 3 வாரங்களுக்கு முன்னர், அவர் பெய்ஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியபோதுதான், கடைசியாக அவரை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். அதன்பிறகு, அவரைக் காண முடியவில்லை. அதன்பிறகு நடந்த எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் கருத்துகளை வெளியிடவில்லை.

`கொரோனா' வைரஸ்
`கொரோனா' வைரஸ்

இதனால் சீன மக்கள் அவர்மீது அதிருப்தியிலும், அச்சத்திலும் இருக்கிறார்கள். அம்மக்களின் மிக முக்கியமான சந்தேகம், ``ஒருவேளை ஜி ஜின்பிங் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பாரோ?" என்பதுதான். அதனால்தான் அவர் தலைமறைவாக இருக்கிறார் என மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தரப்பினர், ``அவர் தன்னை கொரோனாவிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள, பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்திருக்கிறார்" எனவும் சொல்கின்றனர்.

சீன மக்களின் மிக முக்கியமான சந்தேகம், ``ஒருவேளை `ஜி ஜின்பிங்' கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பாரோ?" என்பதுதான்.
ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்

அதிபர் ஜி ஜின்பிங்குக்கு அடுத்த இடத்தில் `லீ கெக் யாங்' உள்ளார். அவரிடம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் பொறுப்பை அதிபர் ஒப்படைத்திருப்பதால், அது சார்ந்த அனைத்துப் பணிகளையும் இவரே செய்து வருகிறார். இவர் மக்களை நேரடியாக சந்தித்துப் பேசினாலும், மருத்துவ உதவிகளைச் சிறப்பாக வழங்கினாலும், ஒரு நாட்டின் அதிபர், இதுமாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் மத்தியில் தோன்றாமல், பாதுகாப்பு இடத்துக்குச் சென்றுவிட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஜி ஜின்பிங் எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் அவரின் கட்சியினரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இதற்கிடையே, சீனாவில் 31 மாகாணங்களில் மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது, மக்கள் மத்தியில் அதிபர் ஜி ஜின்பிங் மீது கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுக்காமல் அதிபர் ஓடி ஒளிந்துகொண்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

corona virus
corona virus
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், பொருளாதார மந்தநிலை என பல விஷயங்கள் சீனாவைச் சுற்றியே நடந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், மருத்துவ ரீதியான மிகப்பெரிய சவாலையும் சீனா இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிறது.

சீன பங்குச்சந்தைகள் கடுமையாக விழுந்துகொண்டிருக்கிறது. சீன பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சீனாவிலிருந்து மற்ற நாடுகள் இறக்குமதி செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றன. இதனால், சீன பொருளாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக சீனா வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் இடையே, வைரஸையும் சமாளித்து பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய கடும் நெருக்கடியில் `ஜி ஜின்பிங்' தள்ளப்பட்டுள்ளார். தலைமறைவிலிருந்து சீக்கிரமாகவே அவர் வெளியில் வர வேண்டும், அனைத்துப் பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டும் என்பதே சீன மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

`அதிகரிக்கும் உயிரிழப்புகள்; சார்ஸை விஞ்சிய கொரோனா! - அச்சத்தில் சீனா #Corona
அடுத்த கட்டுரைக்கு