Published:Updated:

ஆஸ்திரேலியாவில் தேடப்படும் இந்தியர்: தகவல் கொடுத்தால் 1 மில்லியன் டாலர் சன்மானம்! - காரணம் என்ன?

ஆஸ்திரேலியாவில் தேடப்படும் இந்தியர் ( ட்விட்டர் )

இந்தியாவைச் சேர்ந்த ராஜ்விந்தர் சிங் என்பவரைப் பற்றித் தகவல் அளிப்பவருக்கு ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் சன்மானமாக வழங்கப்படும் என அந்த நாட்டு காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த ராஜ்விந்தர் சிங் (38) என்பவர் தன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவிலுள்ள இன்னிஸ்ஃபெயில் பகுதியில் வசித்துவந்திருக்கிறார். இவர், அங்குள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றியிருந்திருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு, அக்டோபர் 23-ம் தேதி வாங்கெட்டி கடற்கரையில் தன் செல்லப்பிராணியுடன் வாக்கிங் சென்ற டோயா கார்டிங்லி (24) என்ற ஆஸ்திரேலியப் பெண் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலையில் ராஜ்விந்தர் சிங் முக்கியமான குற்றவாளியாகக் கருதப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

அக்டோபர் 23, 2018 அன்று கொலை நடந்திருக்கிறது. கொலை நடந்து ஒரு நாள் கழித்து ராஜ்விந்தர் சிங் சிட்னியிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிவிட்டதாக ஆஸ்திரேலிய காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. கொலை நடந்து மூன்றாண்டுகளாகிவிட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபரைப் பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில், குயின்ஸ்லாந்து காவல்துறையின் கண்காணிப்பாளர் சோனியா ஸ்மித் செய்தியாளர்களிடம், ``தேடப்படும் குற்றவாளி பஞ்சாப்பிலுள்ள பட்டர் கலான் பகுதியில் வசிப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் தேடப்படும் இந்தியர்
ஆஸ்திரேலியாவில் தேடப்படும் இந்தியர்
ட்விட்டர்

இந்தியாவில் உள்ளவர்கள் ராஜ்விந்தர் சிங் இருக்கும் இடத்தைப் பற்றித் தகவல் தெரிவிக்க குயின்ஸ்லாந்து காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம். அவரைப் பற்றித் தகவல் கொடுப்பவருக்கு ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் சன்மானமாக வழங்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.