Published:Updated:

சர்ச்சையான நாராயணமூர்த்தி மகள் வரி விவகாரம்... கணவர் ரிஷி சுனக்குக்கு வந்த சிக்கல்?! - பின்னணி என்ன?

ரிஷி சுனக் - அக்‌ஷதா மூர்த்தி

சுனக் தனது பட்ஜெட்டில் இந்த நெருக்கடியைச் சமன் செய்வதற்காக எந்தவொரு புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை என்பது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

சர்ச்சையான நாராயணமூர்த்தி மகள் வரி விவகாரம்... கணவர் ரிஷி சுனக்குக்கு வந்த சிக்கல்?! - பின்னணி என்ன?

சுனக் தனது பட்ஜெட்டில் இந்த நெருக்கடியைச் சமன் செய்வதற்காக எந்தவொரு புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை என்பது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

Published:Updated:
ரிஷி சுனக் - அக்‌ஷதா மூர்த்தி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் (Rishi Sunak) இங்கிலாந்தின் தற்போதைய நிதியமைச்சர். இது இங்கிலாந்தின் இரண்டாவது மிக முக்கியமான அரசாங்கப் பதவி. இங்கிலாந்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள், மக்கள், நாட்டின் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான அடுத்த வேட்பாளராக ரிஷியைக் கருதுகின்றனர். இந்நிலையில்தான் தொடர்ச்சியாகச் சர்ச்சைகளில் சிக்கிவருகிறார் ரிஷி.

ரிஷி சுனக்: அரசியல் பயணம்

ரிஷி சுனக்கின் தந்தை இந்தியாவில் பிறந்தவர். இங்கிலாந்தில் பொது மருத்துவராகச் சேவை புரிந்தார். ரிஷி 2015-ல் முதன்முதலில் ரிச்மண்ட் (யார்க்ஸ்) தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015-2017 நாடாளுமன்றத்தின்போது அவர் சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் தேர்வுக்குழுவின் உறுப்பினராக இருந்தார். 2019 பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிஷி சுனக்
ரிஷி சுனக்
Matt Dunham

பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரசா மேயின் இரண்டாவது பதவிக்காலத்தில் பாராளுமன்ற துணைச் செயலாளர் மட்டத்தில் பணியாற்றினார் ரிஷி. 2019-ம் ஆண்டில், போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, ரிஷிக்குக் கருவூலத்தின் முதன்மைச் செயலர் (நிதியமைச்சர்) பதவி வழங்கப்பட்டது. பொதுவெளியில் இவர்மீது நேர்மறையான கருத்தே இருந்துவந்த நிலையில், சமீபத்தில் இவர்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ரிஷியின் பெயரைப் பெரிய அளவில் பாதித்துள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சர்ச்சைகள்:

1. `விலைவாசி உயர்வு நெருக்கடி!’

இங்கிலாந்தில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு `காஸ்ட் ஆஃப் லிவிங்’ என்னும் தினசரிச் செலவுக்கு வருமானம் ஈட்டுவதே பெரும் பிரச்னையாக எழுந்துள்ளது. 34%-க்கும் அதிகமான மக்கள், அதாவது கிட்டத்தட்ட 23.5 மில்லியன் பேர் இந்த ஆண்டு தினசரிச் செலவைக்கூடச் சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவர்.

இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களில் 44% குறைந்தபட்ச வருமான தரத்தைவிடக் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றன. இந்நிலையில், சுனக் தனது வசந்தகால பட்ஜெட்டில் இந்த நெருக்கடியைச் சமன் செய்வதற்காக எந்தவொரு புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை என்பது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

சர்ச்சையான நாராயணமூர்த்தி மகள் வரி விவகாரம்... கணவர் ரிஷி சுனக்குக்கு வந்த சிக்கல்?! - பின்னணி என்ன?

அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களின் விலை 8% வரை உயர்ந்து, எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணம் ஆண்டுக்கு 2,000 யூரோ என இருமடங்காக அதிகரித்துள்ளன.

தொண்டு நிறுவனங்கள், தொழிலாளர் மற்றும் பிற நலச் சங்கங்கள், நிதியமைச்சர் ரிஷி சுனக், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நெருக்கடியைக் கடக்க உதவுமாறு அழைப்புவிடுத்துள்ளனர்.

2. அக்‌ஷதா மூர்த்தி வரி சர்ச்சை:

ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பைவிட அதிகம்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தி, பெங்களூரைத் தளமாகக்கொண்ட ஐடி நிறுவனத்தில் சுமார் 0.93 சதவிகித உரிமை வைத்திருக்கிறார், இது தற்போதைய விலையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் மதிப்புடையது என்று புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் பங்குகளிலிருந்து அவர் ஆண்டுக்கு 11.5 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 11.56 கோடி) பெறுகிறார் என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்ச்சையான நாராயணமூர்த்தி மகள் வரி விவகாரம்... கணவர் ரிஷி சுனக்குக்கு வந்த சிக்கல்?! - பின்னணி என்ன?

இங்கிலாந்தில் குடியுரிமை இல்லாத நபராக இருப்பதால், இங்கிலாந்தில் வெளிநாட்டு வருமானத்துக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அக்‌ஷதா கூறியுள்ளார். “அக்‌ஷதா மூர்த்தி இந்தியாவின் குடிமகள்” என்று அவரின் செய்தித் தொடர்பாளர் தி கார்டியனிடம் தெரிவித்தார். "இந்தியா தனது குடிமக்கள் ஒரே நேரத்தில் மற்றொரு நாட்டின் குடியுரிமையை வைத்திருக்க அனுமதிக்காது. இங்கிலாந்தில் குடியுரிமை பெறாமல் நான்-டொமோசைல் (Non-domocile)-ஆக வாழ்கிறார் அக்‌ஷதா. இந்த வகையில் குடியிருப்பவர்கள் இங்கிலாந்தில் சம்பாதிப்பதற்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். வெளிநாடுகளிலிருந்து வரும் வருமானத்துக்கு இங்கிலாந்தில் வரி செலுத்தத் தேவையில்லை.

தி கார்டியனின் அறிக்கையின்படி, இன்ஃபோசிஸிடமிருந்து அவர் இதுவரை 54.5 மில்லியன் பவுண்டுகளை வருமானம் கண்டுள்ளார். நான்-டாம் ஸ்டேட்டஸ் காரணமாக இங்கிலாந்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை. இதனால் மட்டும் சுமார் 20 மில்லியன் யூரோ அக்‌ஷதா வரி செலுத்தாமல் இருந்துள்ளார். இது சட்டபூர்வமானதே. சுனக் 2018-ல் அமைச்சரானபோதும், ஒரு வருடத்துக்குப் பிறகு இங்கிலாந்து கருவூலத்துக்குப் பொறுப்பேற்ற பிறகும் தனது மனைவியின் வரி அந்தஸ்தை அமைச்சரவை அலுவலகத்துக்குத் தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதன்கிழமை மாலை `அக்‌ஷதா எந்தத் தவறும் செய்யவில்லை. அவரை பிரைவேட் சிட்டிசன் என்று தாக்குவது நியாயமற்றது’ என்றும் கூறினார்.

ரிஷி சுனக், பிரதமரின் ஆலோசகர்களை, மினிஸ்டரல் இன்டரெஸ்ட்ஸ் ரிவ்யூ-வை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தான் விதிகளைப் பின்பற்றி நடந்திருப்பதை இது காண்பிக்கும் என்று நம்புவதாகவும் கூறினார். ரிஷியின் சொத்து மதிப்பு மற்றும் பிற அறிவிப்புகள் பிரதமரின் ஆலோசகர் லார்ட் கீட் மூலம் ஆய்வு செய்யப்படும்.

ஏற்கெனவே, உக்ரைனில் நடந்த போருக்கு மத்தியில் இங்கிலாந்து, மாஸ்கோ மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துக்கொண்டிருந்த நேரத்தில், இன்ஃபோசிஸ் தொடர்ந்து ரஷ்யாவில் இயங்கியது. இது குறித்த கேள்விகளையும் சுனக் எதிர்கொண்டார். அதைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் விரைவில் ரஷ்யாவிலிருந்து வெளியேறப்போகிறது என்று அறிக்கைகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இனவெறி?

இங்கிலாந்தின் வணிகம், எரிசக்தி மற்றும் தூய்மையான வளர்ச்சிக்கான மாநில அமைச்சர் கிரெக் ஹேண்ட்ஸ், ``சுனக் மற்றும் அவரின் மனைவி குறிவைக்கப்பட்டவிதத்தில் ஒரு இனவெறி கூறு இருக்கலாம்” எனச் சந்தேகம் கிளப்பினார்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்
Alastair Grant

இது தொடர்பாக அவர் பிபிசி-யிடம் பேசுகையில், "அவர் ஒரு வெளிநாட்டவர் என்பதாலேயே வெளியிடப்படும் சில கருத்துகள் விரும்பத்தகாதவை ஆகின்றன" என்று கூறினார்.

தி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், கன்சர்வேடிவ் கட்சியின் பொருளாளராக இந்தியர்களிடமிருந்து நிதி திரட்டிய டோரி பியர் ராமி ரேஞ்சர், “சுனக் மற்றும் அவர் மனைவி மீதான தாக்குதல் அனைத்து இந்தியர்கள் மீதான தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. சமூக அளவில் பெரிய பதவிக்கு ஒருவர் எழும்போது, ​​அவரை வீழ்த்த சமூகம் விரும்புகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கடினமான பொருளாதார காலத்தில் ரிஷி எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டார் என்பதைப் பற்றி யாரும் பேசவில்லை. அவர் பொருளாதாரத் தூண்களை உறுதிப்படுத்தினார். ரிஷிதான் அமைச்சரே தவிர, அவரின் மனைவி அல்ல” என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism