Published:Updated:

டெஸ்லா நிறுவனத்தில் ஆட்டோபைலட் பிரிவின் இயக்குநர், யார் இந்த அசோக் எல்லுச்சாமி?

Ashok Ellusamy
News
Ashok Ellusamy

அசோக் எல்லுச்சாமி தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையிலுள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் மின்னணு மற்றும் தொடர்புத் துறையில் பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார்.

அசோக் எல்லுச்சாமி என்கிற பெயர்தான் தற்போதைய வைரல். காரணம் எலான் மஸ்க்கின் ஒரு சின்ன ட்வீட். சில வாரங்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றில் டெஸ்லா நிறுவனம் குறித்த பல்வேறு விஷயங்களைப் பேசியிருந்தார் எலான் மஸ்க். அதில், டெஸ்லாவின் ஆட்டோபைலட் குறித்த தொழில்நுட்பம் எந்த அளவிற்கு மேம்பட்டிருக்கிறது என்பது குறித்த உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது ஆண்ட்ரே என்பவரைக் குறிப்பிட்டு, "ஆட்டோபைலட் தொழில்நுட்பம் இந்த அளவிற்கு மேம்பட்டிருப்பதற்கு அவருடைய பங்களிப்பு காரணமாக இருந்திருக்கும்" எனக் குறிப்பிடுகிறார் கேள்வி கேட்பவர். அதன் பின் தான் எலான் மஸ்க் இடைமறித்து, "ஆண்ட்ரேவுடைய பங்கு நிச்சயமாகக் குறிப்பிடத்தக்கது. ஆனால், டெஸ்லாவின் முன்னேற்றத்திற்குப் பின்னால் திறமையான பலர் இருக்கிறார்கள். அசோக் தான் டெஸ்லா ஆட்டோபைலட்டின் தலைமைப் பொறியாளர், ஆண்ட்ரே செயற்கைத் தொழில்நுட்பத்தின் இயக்குநர்." எனக் கூறியிருந்தார் எலான் மஸ்க்.

காணொளியின் இந்தப் பகுதியை மட்டும் ட்விட்டரில் ஒருவர் பகிர, அதற்குப் பதிலளிக்கும் விதமாக 'டெஸ்லாவின் ஆட்டோபைலட் குழுவுக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அசோக் தான்' என ட்வீட் செய்திருக்கிறார் எலான். இதனைத் தொடர்ந்தே சமூக வலைத்தளங்களில் வைரலாகினார் அசோக்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

யார் இந்த அசோக் எல்லுச்சாமி?

அசோக் எல்லுச்சாமி தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையிலுள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் மின்னணு மற்றும் தொடர்புத் துறையில் பொறியியல் படிப்பையும், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் உள்ள கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் ரோபாடிக்ஸ் சிஸ்டம் டெவலப்மண்ட் துறையில் முதுகலை அறிவியல் படிப்பையும் முடித்திருக்கிறார் அசோக். இதற்கிடையில். WABCO மற்றும் ஃபோக்ஸ்வாகன் ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இதனைத் தொடர்ந்தே 2014-ல் டெஸ்லாவில் ஆட்டோபைலட் பிரிவில் மென்பொருள் பொறியாளராக பணியில் இணைந்திருக்கிறார் அசோக். 2014-ல் இருந்து டெஸ்லாவின் பல்வேறு படிநிலைகளில் பணியாற்றிய பின்பு 2019-ல் ஆட்டைபைலட் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் அசோக் எல்லுச்சாமி.

அசோக் எல்லுச்சாமி
அசோக் எல்லுச்சாமி

எலக்ட்ரிக் வாகனங்களில் டெஸ்லா கார்கள் சிறப்பானவையாக இருக்கின்றன. ஆட்டோபைலட் தொழில்நுட்பத்திலும் மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும் போது டெஸ்லா வாகனங்கள் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் டெஸ்லா ஆட்டோபைலட் மோடில் இருக்கும்போதே காரில் ஒரு குழந்தை பிறந்து வைரலானது குறிப்பிடத்தக்கது.