உக்ரைன் நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரமான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்தனர். உக்ரைன் தலைநகர் கீவ்-வில் ரஷ்யப் படை குண்டு போட்டுவருவதாகவும், உக்ரைன் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் நகரில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திவருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துவருகின்றன.

இந்த நிலையில் இது குறித்துப் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ``உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும். உக்ரைன் மோதலில் தலையிடும் வெளிநாட்டவர்கள் இதுவரை கண்டிராத கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். உக்ரைனை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமில்லை. உக்ரைன் ராணுவம் தனது ஆயுத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்'' என்றார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் 100 டாலரைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
