Published:Updated:

கல்லூரி மாணவர்களுக்கு ஆபாசப் பட வகுப்புகள்; அமெரிக்க கல்லூரியின் முடிவுக்கு என்ன காரணம்?

Representational Image ( Photo by Product School on Unsplash )

இந்த அறிவிப்பு வெளியானதும் ஏற்பட்ட எதிர்ப்புகளால் சமூக ஊடகத்தில் இருந்து இந்தப் பதிவு நீக்கப்பட்டது. இருந்தபோதிலும் கல்லூரி திட்டமிட்டபடி வரும் மே மாதத்தில் ஆபாசப் படங்கள் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பை வழங்குவதில் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று மாணவர்களுக்கு ஆபாசப் படங்களை ஒன்றாகப் பார்க்கும் வகுப்புகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

உட்டாவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி, சால்ட் லேக் சிட்டியில் உள்ள ஒரு தனியார் கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் எடுக்கவிருக்கும் வகுப்புகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது. அதில் ஃபிலிம் 300O என்ற தலைப்பில் மாணவர்கள் ஒன்றாக ஆபாசப் படங்களைப் பார்க்கவும், இந்த வகுப்புகளின் மூலம் மாணவர்கள் பாலின சமத்துவமின்மையைப் புரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்தது. பாலினமயமாக்கலில் உள்ள சிக்கல்களையும் இன, வர்க்க மற்றும் பாலினம் குறித்தும் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்.

Representational Image
Representational Image
Photo by Ivan Aleksic on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும் இந்தப் பாடத்திட்டத்தின் வகுப்புகள் இத்துறையில் நன்கு பயிற்சிபெற்ற ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். மேலும் இந்த வகுப்பை நடத்தும்போது மாணவர்கள் அசௌகர்யமாக உணரும் பட்சத்தில் வகுப்பை விட்டு வெளியேறி விடலாம். இதற்காக மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கல்லூரி நிர்வாகம் எடுக்காது என வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரியின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஷீலா யோர்கின் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் ஏற்பட்ட எதிர்ப்புகளால் சமூக ஊடகத்தில் இருந்து இந்தப் பதிவு நீக்கப்பட்டது. இருந்தபோதிலும் கல்லூரி திட்டமிட்டபடி வரும் மே மாதத்தில் ஆபாசப் படங்கள் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பை வழங்குவதில் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism